இனி இந்த போன்களில் வாட்ஸ்ஆப் இல்லை!
பிரபல உரையாடல் செயலியான வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களுக்கு ஒரு சில போன்களில் தனது சேவைகளை நிறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப்
மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வாட்ஸ்ஆப் செயலிக்கு உலகம் முழுவதும் ஏராளமான பயனர்கள் உள்ளனர். பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்ஆப் செயலி அவ்வப்போது புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழக்கம்.
அந்தவகைளில், கடைசியாக அக்டோபர் மாதம் WhatsApp ஆனது iPhone SE, iPhone 6S, iPhone 6S Plus மற்றும் Samsung, Huawei, LG, Sony, ZTE, HTC, Lenovo மற்றும் Alcatel ஆகியவற்றிலிருந்து 40 க்கும் குறைவான ஆண்ட்ராய்ட் சாதனங்களை இனி ஏற்காது என்பதை வெளிப்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு நிறைவுக்கு வரும் வேலையில் வாட்ஸ்ஆப் தனது சேவைகளை சில ஆண்ட்ராய்ட் மற்றும் சில ஐ-போன் மாடல்களுக்கும் சேவைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் பயனாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் காலாவதியான மற்றும் பழைய இயங்குதளங்களைக் கொண்டுள்ள போன்களில் மட்டுமே நிறுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Apple, Archos, ZTE, HTC, Huawei, Lenova, LG, Samsung, sony, Wiko குறித்த தொலைப்பேசிகளில் டிசம்பர் 31ஆம் திகதி வாட்ஸ்ஆப் சேவைகளை நிறுத்தவுள்ளது.