Whatsapp Storage பிரச்சனையா? விரைவில் புதிய ‘டவுன்லோட் குவாலிட்டி’ அம்சம்
வாட்ஸ்அப் புதிய 'டவுன்லோட் குவாலிட்டி' அம்சத்தை அறிமுகப்படுத்த இருக்கும் நிலையில், இதனால் போன் ஸ்டோரேஜ் பிரச்சனை இல்லாமல் இருக்கலாம்.
வாட்ஸ்அப்பின் புது முயற்சி
இன்று பெரும்பாலான நபர்கள் கண்விழிக்கும் போதிலிருந்து உறங்கும் வரை கையில் போன் இல்லாமல் இருப்பதில்லை. அதிலும் முக்கியமாக Whatsapp இணையத்தை அதிகமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது குறுஞ்செய்தியில் தொடங்கி பண வர்த்தனை வரை அனைத்தும் வாட்ஸ் அப்பினை பயன்படுத்தி செய்து கொள்ள முடியும்.
ஆனால் வாட்ஸ் அப்பில் வரும் புகைப்படம் மற்றும் காணொளிகளால் ஸ்டோரேஜ் பிரச்சனை ஏற்படுகின்றது. இதற்காக புதிய அம்சமான டவுன்லோட் குவாலிட்டி என்பதை விரைவில் வெளியிட இருக்கின்றது வாட்ஸ் அப் நிறுவனம்.
‘டவுன்லோட் குவாலிட்டி’
வாட்ஸ்அப் அப்டேட்களுக்கான நம்பகமான ஆதாரமான WABetaInfo இன் சமீபத்திய அறிக்கையின்படி, இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு பதிப்பு 2.25.18.11 க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அப்டேட், உள்வரும் மீடியா கோப்புகள் பதிவிறக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, HD அல்லது SD தரத்தைத் தேர்வுசெய்யும் ஒரு விருப்பத்தை பயனர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
பீட்டா பதிப்பிலிருந்து பகிரப்பட்ட ஒரு ஸ்கிரீன்ஷாட், பயனர்கள் இந்த அம்சத்தை Settings > Storage and Data > Auto-Download Quality என்பதற்குச் சென்று அணுகலாம் என்பதைக் காட்டுகிறது.
அங்கிருந்து, பயனர்கள் தங்கள் ஸ்டோரேஜ் விருப்பங்களுக்கு ஏற்ப HD மற்றும் SD விருப்பங்களுக்கு இடையில் தேர்வு செய்ய முடியும்.
தற்போது, இந்த அம்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுடன் சோதிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், சோதனை முடிந்தவுடன், இது வரவிருக்கும் அப்டேட்களில் பரவலாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |