WhatsApp பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி! மெட்டாவின் அதிரடி அறிவிப்பு
தற்காலத்தில் உலகளாவிய ரீதியில் தகவல் பரிமாற்றத்தில் தவிர்க்க முடியாத செயலியாக திகழும் வாட்ஸ்அப்பில், விளம்பரங்கள் இல்லாத தடையற்ற சேவையைப் பெற புதிய கட்டணத் திட்டத்தை அறிமுகம் செய்ய மெட்டா நிறுவனம் தீர்மானித்துள்ளதாக வெளியாக தகவல் வாட்ஸ்அப் பயனர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் சுமார் 300 கோடி மக்கள் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இது தகவல் பரிமாற்றத்தில் இன்றியமையாத செயலியாக மாறிவிட்டது என்றால் மிகையாகாது. ஆரம்பத்தில், குறுஞ்செய்தி அனுப்பும் வசதியுடன் அறிமுகமான வாட்ஸ்அப் செயலி, காலப்போக்கில் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் ஆவணங்களைப் பகிரும் வசதிகளை மேம்படுத்தியது.
பின்னர் குழு அரட்டை (Group Chat), ஸ்டேட்டஸ் (Status) போன்ற வசதிகளால் தொழில்நுட்ப உலகில் வாட்ஸ்அப் தனக்கெனத் தனித்துவமான இடத்தையே உருவாக்கிக்கொண்டது.
இந்நிலையில், வாட்ஸ்அப் மூலம் வருவாயைப் பெருக்கும் நோக்கில், கொண்டுவரவுள்ள புதிய திட்டம் குறித்து விரிவான விளக்கத்தை இந்த காணொளி வாயிலாக காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |