Chat GPT! இனி வட்ஸ் அப்பில் நீங்கள் பதிலளிக்க தேவையில்லை
நாளுக்கு நாள் தொழில்நுட்பமானது புதிய புதிய விடயங்களை அறிமுகப்படுத்திக் கொண்டேயிருக்கின்றது. அதிலும் குறிப்பாக முகப்புத்தகம், வட்ஸ் அப் போன்றவை நாளுக்கு நாள் தமது அப்டேட்களை புதுப்பித்துக் கொண்டெயிருக்கின்றது.
OpenAIஇன் CHATGPTஅறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஏஐ தொழில்நுட்பமானது புதிய பரிமாணத்தையும் உயரத்தையும் எட்டி, தொழில்நுட்பத்தால் எந்த எல்லைக்கும் செல்லலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.
உங்களுக்கு வரும் வட்ஸ் அப் செய்திகளை படிப்பதற்கு உங்களுக்கு நேரமில்லையா? பதிலளிக்க சோர்வாக இருக்கிறதா? இனி கவலையே வேண்டாம்!
நீங்கள் அனுப்ப வேண்டிய வட்ஸ் அப் செட்களுக்கு செட்ஜிபிடியே இனி பதிலளித்துவிடும். இதற்கு ஹிட் ஹப் இன் துணை வேண்டும். டெவலப்பர் டேனியல் கிராஸ்ஸால் இது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்த தொடங்கும் முன்பு இதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
செட்ஜிபிடி, கூகுள்,மெட்டா என்பவற்றின் அதிகாரப்பூர்வ அங்கீகரிக்கப்பட்ட செயல்முறை அல்ல இது.
இது அவரவர்களின் சொந்த விருப்பங்களின் அடிப்படையில் செட்ஜிபிடி மற்றும் வட்ஸ் அப் இணைப்பை ஏற்படுத்தலாம்.
செட்ஜிபியுடன் வட்ஸ் அப் ஐ இணைக்க வேண்டுமாயின் ஹிட்ஹப் சென்று தேவையான மொழி பைல்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்னர் அங்கே கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களைக் கொண்டு வட்ஸ் அப்பில் செட்ஜிபிடியை இணைத்துக் கொள்ளலாம்.
இது தொடர்பான விளக்க வீடியோக்களை பார்த்து தெளிவான விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.