உணர்வுகளை வெளிப்படுத்த பயப்படும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க
பொதுவாகவே ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவரின் எதிர்கால வாழ்க்கை மற்றும் ஆளுமைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் மனதில் உள்ள விடயத்தை வெளியில் சொல்வதற்கு பெரிதும் தயங்குவா்கள்.
எந்த விடயத்தையும் பகிர்ந்துக்கொள்வதற்கு இவர்களுக்கு ஆர்வம் இருக்காது. இப்படிப்பட்ட விசித்திரமான ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
பொதுவாகவே கடக ராசியில் பிறந்தவர்கள் எந்த விடயத்தையும் வெளிப்படையாக பேச விரும்பமாட்டார்கள்.
இவர்களின் மனம் எப்போதும் நிராகரிப்பை நினைத்து பயத்துடனேயே இருக்கின்றது. இவர்கள் இதனால் எந்த உணர்வையும் எளிதில் வெளியில் சொல்ல மாட்டார்கள்.
கன்னி
இந்த ராசியினர் எப்போதும் மனதுக்குள் தர்க்கம் செய்யும் பண்பை கொண்டிருப்பார்கள். இவர்கள் எப்போதும் உணர்வுகளுடன் பேராடிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் அதனை வெளிப்படுத்த பயந்துக்கொண்டே இருப்பார்கள்.
மகரம்
மகர ராசியினர் தங்களின் சுய ஒழுக்கம் குறித்து எப்போதும் மிகவும் அக்கறையுடன் இருப்பார்கள். இவர்கள் நிராகரிப்புக்கு அதிகமாக பயப்படுவதனால் உணர்வுகளை தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்கின்றார்கள்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் சுதந்திர உணர்வை அதிகம் விரும்புகின்றார்கள். இவர்களின் சுதந்திரம் பறிக்கப்படும் என்ற பயத்தில் பல நேரங்களில் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்து இவர்களுக்கு சவாலான விடயமாக இருக்கும்.
மீனம்
மீன ராசியினர் மிகவும் இரக்க குணம் கொண்டவர்கள். இவர்கள் பல நேரங்களில் கற்பனை உலகில் வாழும் தன்மையை கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த மிகவும் தயக்கம் காட்டுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |