பணத்தை பார்த்து திருமணம் செய்யும் பெண் ராசியினர் இவர்கள் தனாம்... ஏன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அவர்களின் பிறப்பு ராசியானது அதிக ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் உறவுகளை விடவும் பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
அப்படி பணத்தின் மீது கொண்ட பேராசையால், பணத்துக்காக காதல் செய்யவும், திருமணம் செய்யவும் கூட தயாராகிவிடும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசியில் பிறந்த பெண்கள் யதார்த்தமான வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் வாழ்வதற்கு பாசம் தான் முக்கியம் என்ற கண்மூடித்தமாக கோட்பாடுகளையும் தத்துவங்களையும் வெறுபவர்களாக இருப்பார்கள்.
திருமணத்தைப் பொறுத்தவரை, பணம் எந்தளவு முக்கிய இடம் வகிக்கும் என்ற விடயத்தை வெளிப்படையாக பேசும் குணம் இவர்களிடம் இருக்கும்.
லச்சியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் அனாவசிய உணர்ச்சிகளில் சிக்கிக்கொள்வதை எப்போதும் விரும்புவது கிடையாது.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் சுக்கிரன் ஆதிக்கம் கொண்டவர்கள் என்பதால் ஆடம்பர பொருட்கள், சொகுசு வாழ்க்கை மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் நிதி ரீதியான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன் பணவிடயங்களில் செழிப்பை விரும்புவார்கள். இவர்கள் சுமாரான ஒரு வாழ்க்கை தேர்ந்தெடுப்பதை பெரும்பாலும் புறக்கணிக்கின்றார்கள்.
காலில் அதிக நேர்மை குணம் கொண்ட இவர்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் காதலை துரத்துவதில் ஈடுபாடுகாட்ட மாட்டார்கள்.
விரும்பிய வாழ்க்கை அமைக்க பணம் எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்தவர்களாக இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே சிறந்த தலைமைத்துவ பண்புகளை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
ஆடம்பத்தின் மீதான ஈர்ப்பு இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். காதல் மீதும் உறவுகள் மீதும் இவர்கள் அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்கின்ற போதும் அதைவிட பணம் முக்கியம் என்ற கொள்கையை பின்பற்றுவார்கள்.
எனவே திருமண விடயத்திலும் பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.அதற்காக இவர்களிடம் அன்பு இல்லை என அர்த்தம் கிடையாது. பணம் இருந்தால் தான் வாழ முடியும் என்ற யதார்த்த உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |