லட்சியவாதிகளுக்கு இருக்கும் ஒரே அடையாளம்.. உங்களுக்கு இருக்கா?
ஒருவரின் குணாதியங்களை பல வழிகளில் கண்டுபிடிக்கலாம்.
மனிதர்களின் நெற்றியில் வரும் கோடுகளை வைத்து அவர்களின் குணங்களை அறியலாம். அத்துடன் அவர்களின் எதிர்காலத்தையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மெட்டோபோஸ்கோபியின் படி, நெற்றியானது ஆன்மாவின் வரைபடம் என்றும், நெற்றியில் தெரியும் கோடுகள் ஒருவரின் குணாதிசயங்களை வெளிப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. சிலர் இதனால் தங்களின் துணையின் குணங்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள்.
அப்படியானவர்களை குறித்த நபரின் நெற்றியில் உள்ள கோடுகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில், முகம் சுளிக்கும் பொழுது ஒருவரின் நெற்றியில் வரும் கோடுகளை வைத்து கண்டுபிடிக்கக் கூடிய விடயங்கள் தொடர்பில் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஒரு கோடு
- முகத்தை சுளிக்கும் போது நெற்றியில் ஒரு கோடு தெரிந்தால்,அவர்களி எதிலும் உறுதியானவர்களாக இருப்பார்கள். லட்சியவாதியாக இருப்பதனால் விடாமுயற்சியை கைவிடமாட்டீர்கள்.
- உங்களின் வலுவான பணி நெறிமுறை மற்றும் இலக்குகளில் கவனம் செலுத்தும் திறனுக்காகவே பிறந்திருப்பவர்களாக பார்க்கப்படுவீர்கள்.
- புத்திசாலியாகவும் திறமைசாலியாகவும் இருக்கும் நீங்கள் சில சமயங்களில் சுயநலவாதியாகவும், காதல் இல்லாதவராகவும் இருப்பீர்கள்.
- சற்று அகங்காரம் கொண்டவராக இருப்பதால் நண்பர்களை விட எதிரிகள் தான் அதிகமாக இருப்பார்கள்.
- எதையும் மனதில் வைத்து கொள்ளாமல் வெளிப்படையாக பேசும் நபராக இருப்பீர்கள். அதுவும் பெண்களுக்கு நெற்றியில் ஒரு கோடு இருந்தால், அவர்கள் ஆக்ரோஷமாக இருப்பார்கள்.
- நெற்றியில் ஒரு கோடு கொண்டவர்களுக்கு வணிகம், சட்டம், அரசியல், மருத்துவம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற தொழில்களில் சிறந்து விளங்குவார்கள்.
இரண்டு கோடுகள்
- நெற்றியில் 2 கோடுகள் தெரிந்தால் அவர்கள் புத்திசாலிகளாகவும் சிந்தனைமிக்கவராகவும் இருப்பார்கள். எதையும் நன்கு பகுப்பாய்வு செய்து கடின உழைப்பாள் முன்னேறி வருவார்கள்.
- லட்சியவாதிகளாக இருக்கும் இவர்கள் செய்யும் காரியங்கள் வெற்றிகரமாகவே அமையும்.
- படைப்பாற்றல் கொண்டவராக இருக்கும் இவர்கள் புதிய யோசனைகளை கொண்டு வருவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
- நண்பர்கள், குடும்பத்தினர்களுக்கு விசுவாசமாகவும், ஆதரவாகவும் இருப்பார்கள். அத்துடன் மற்றவர்கள் மீது அதிகமான அக்கறை காட்டுவார்கள்.
- நடிப்பு, நாடகம், இசைக்கலைஞர், எழுத்தாளர், விஞ்ஞானி, வழக்கறிஞர், கட்டிடக் கலைஞர், கணக்காளர் போன்ற தொழில்களில் சிறந்து விளங்குவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |