இந்த புகைப்படத்தில் உங்க கண்ணுக்கு முதல்ல தெரிந்தது என்ன? அதிகமாக காயப்படுவீங்களாம்
ஒருவரது குணாதிசயங்களை புதிர் நிறைந்த படங்கள் மூலமாக கண்டுபிடிக்கலாம். இதற்கு பெயர் தான் ஆப்டிகல் இல்யூஷன் ஆகும்.
அதாவது ஒருவரது குணாதிசயங்கள், பலம் மற்றும் பலவீனம், சிந்திக்கும் திறன் இவற்றினை ஒரே ஒரு புகைப்படத்தினை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த வகையான படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அறிவுத்திறனைப் பற்றியும் வெளிப்படுத்தும்.
அதாவது ஒரு படத்தினை நாம் அவதானித்தால், ஒவ்வொருவரின் கண்களுக்கு ஒவ்வொரு விதமாக தெரியும். இவ்வாறு தென்படும் விடயங்களை வைத்து, நீங்கள் உலகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களது கண்ணோட்டம் எப்படி இருக்கின்றது என்பதை தெரியபடுத்துகின்றது.
மேலும் ஆப்டிகல் இல்யூஷன் படமானது ஒருவரது வலது மூளை அல்லது இடது மூளையின் செயல்பாட்டைப் பற்றி வெளிப்படுத்துகின்றன.
நீங்கள் உங்களின் எந்த மூளை சுறுசுறுப்பாக உள்ளது தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.
மேகங்கள்
குறித்த புகைப்படத்தில் உங்களது கண்களுக்கு முதலில் மேகங்கள் தெரிந்தால், நீங்கள் அவ்வளவு எளிதாக மற்றவர்களை நம்பாமலும், பழகாமலும் இருப்பீர்களாம். உங்களுக்கு நன்கு தெரிந்தவர்களுடன் பழகுவதும், உதவிகள் செய்வது என்று இருப்பீரக்ள்.
சற்று சிடுமூஞ்சியாகவே தெரியும் நீங்கள், வாழ்க்கையில் அவநம்பிக்கையான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தாலும், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வீர்கள். மிகவும் திறமையானவராக இருக்கும் நீங்கள் மற்றவர்கள் உங்களிடம் நட்பாக பழக வந்தாலும் அவ்வளவு எளிதாக நம்பமாட்டீர்கள்.
உதடுகள்
குறித்த புகைப்படத்தில் உங்களது கண்களுக்கு உதடுகள் முதலில் தெரிந்தால், மற்றவர்களை எளிதில் நம்பும் கொண்டதுடன், மிகவும் அன்பானவராகவும், அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பீர்கள்.
உங்களுக்கு பிடித்தவர்களுடன் சண்டை ஏற்படும் போதெல்லாம், நீங்கள் ஆழமாக காயப்படுவீர்கள். மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |