இந்த அறிகுறிகளை பெண்கள் புறக்கணிக்கவே கூடாது... கருப்பை புற்றுநோய் ஏற்படலாம்!
பெண்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் நோய்களில் கர்ப்பப்பை புற்றுநோய் முக்கிய இடம் வகிக்கின்றது.
கர்ப்பப்பை புற்றுநோயினை ஆரம்ப கட்டத்திலேயே அறிந்துக்கொள்வது மிகவும் கடினமான விடயமாகும்.
இறுதிநிலைக்கு வந்தபின்ரே இதன் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும். இருப்பினும் இது குறித்த போதிய தெளிவு இருக்கும் பட்சத்தில் சில அறிகுறிகள் மூலம் கருப்பை புற்றுநோய் இருப்பதை தெரிந்துக்கொள்ள முடியும். குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள பெண்களிடையே கருப்பை புற்றுநோய் அதிகமாக கண்டறியப்படுகின்றது.
இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த வகையில் கருப்பை புற்றுநோய் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் தொடர்பிலான முழுமையாக விபரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கருப்பை புற்றுநோய் அறிகுறிகள்
தேவையற்ற வகையில் கலன்கள் பிரிந்து பெருகுவதே புற்றுநோய் எனப்படும். அந்தவகையில் பெண்களின் கருப்பையில் ஏற்படும் செல்களின் பெருக்கமே கருப்பை புற்றுநோய் எனப்படுகின்றது.
சாதாரணமாக பிறப்புறுப்பில் இருந்து திரவம் வெளியேறுவது வழக்கமான நிகழ்வு தான். ஆனால் அசாதாரண அளவில் அதிகமாக பிறப்புறுப்பில் இருந்து திரவங்கள் வெளியேறுவது இயல்பான விடயமாக கருத முடியாது.
இதுபோன்று அசாதாரணமாக திரவ வெளியேற்றம் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம். பிறப்புறுப்பில் இருந்து திவரம் வெளியேறுவது பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளின் குறியீடாக கருதப்படுகின்றது.
குறிப்பாக கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகளில் இது மிக பிரதானமான அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
கால்கள் மற்றும் பாதங்களில் அதிக வலியை உணர்தால் அல்லது வீக்கம் ஏற்படுவதும் கருப்பை புற்றுநோய்க்கான ஆரம்ப கால அறிகுறியாக கருத முடியும்.
இது குறித்து சற்று அவதானமாக இருக்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் குருதிப்போக்கு என்பது இயல்பானது தான்.
ஆனால் அசாதாரண நிலையில் அளவுக்கு அதிகமாக குருதிப்போக்கு ஏற்பட்டாலோ அல்லது மாதவிடாய் காலம் தொடங்குவதற்கு முன்பாகவோ அல்லது முடிந்த பிறகோ பிறப்புறுப்பில் இருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டாலோ மருத்து பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.
பொதுவாக சிறுநீர் பை நிரம்பும் போது சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படும்.
நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை இருக்கக்கூடும். சில சமயங்களில் சிறுநீர் பை நிரம்பி சிறுநீரை உங்களால் கட்டுப்படுத்தவே முடியாமல் நிலை ஏற்படும்.
இது எப்போதாவது ஏற்படுவது இயல்புதான் ஆனால் அடிக்கடி இந்த நிலை ஏற்பட்டால் இது கருப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவதும் கருப்பை புற்றுநோயின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. புற்றுநோய் கட்டி குடலில் அழுத்தத்தை உண்டாக்கி மலம் கழிப்பதை சிரமமாக்குகிறது.
மலச்சிக்கல் பொதுவாக வேறு காரணங்களினாலும் ஏற்படும். ஆனால் மலச்சிக்கலுடன் ஏனைய அறிகுறிகளும் இருந்தால் நிச்சயம் மருத்துவ பரிசோதனை முக்கியம்.
புற்றுநோய் செல்கள் உடலில் மெடபாலிஸத்தை பாதிப்பதால் அடிக்கடி சோர்வாகவும் களைப்பாகவும் தோன்றும் ஏனைய அறிகுறிகளுடன் அதிகமான உடல் சோர்வும் இருந்தால் கருப்பை புற்றுநோயின் அறிகுறியாக கருதமுடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |