சாணக்கிய நீதி: பெண்கள் இந்த குணமுள்ள ஆண்களுடன் மட்டும் தான் மகிழ்சியாக இருப்பார்கள்...உங்களிடம் இருக்கா?
சாணக்கிய நீதி உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற ஒரு தத்துவ நூலாக திகழ்கின்றது. இந்த நூல் ஆச்சாரியா சாணக்கியரின் கொள்கைகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கி தொகுக்கப்பட்டுள்ளது.
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.
இவரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏராளம் பேர் இருக்கின்றனர். வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு சிறந்த வழிக்காட்டியாக இருந்துள்ளது.
அந்தவகையில் சாணக்கிய நதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு பெண் எப்படிப்பட்ட குணம் கொண்ட ஆண்களை அதிகம் விரும்புகின்றார்கள் எனவும் அவர்களின் திருமண வாழ்க்கை எந்த குணம் கொண்ட ஆண்களால் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
பெண்கள் விரும்பும் குணங்கள்
சாணக்கிய நீதியின் அடிப்படையில் பெண்கள் பொதுவாக நேர்மையான குணம் கொண்ட ஆண்களை தான் அதிகம் விரும்புகின்றார்கள்.
நேர்மையான ஆண்கள் தங்களையும் உறவில் ஏமாற்றமாட்டார்கள் என்ற நம்பிக்கையை பெண்களுக்கு கொடுக்கின்றது.அதனால் இந்த குணம் கொண்ட ஆண்களுடனான திருமண வாழ்க்கை பெண்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கின்றது.
சாணக்கியரின் கருத்துப்படி ஆண்களிடம் ஒழுக்கம் இருந்தால் பெண்களுக்கு அதைவிட மகிழ்ச்சி கொடுக்கும் விடயம் வேறேதும் இருக்க முடியாது என்கின்றார்.
ஒரு ஆண் நல்ல நடத்தை உள்ளவராக இருந்தால், அவருடன் இருக்கும் பெண் வாழ்கை முழுவதும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழமுடியும்.
சாணக்கியர் குறிப்பிடுகையில் குறிப்பாக பெண்களை மதிக்கும் குணம் கொண்ட ஆண்களை பார்த்த நொடியிலேயே விரும்ப ஆரம்பித்துவிடுவார்கள். இந்த குணம் கொண்ட ஆண் வாழ்க்கை துணையாக கிடைப்பதை பெரும்பாலான பெண்கள் வரமாக பார்க்கின்றார்கள்.
பெண்கள் தங்கள் பிரச்சினைகளைக் கேட்க தங்களின் நேரத்தை ஒதுக்கும் ஆண்களிடம் அடிமையாகவே மாறிவிடுவார்கள். பெண்கள் இயல்பாகவே அதிகம் பேசுவதால் ஆறுதலடைய கூடியவர்கள்.எனவே தங்களின் பேச்சுக்கு செவிசாய்க்கும் ஆண்களிடம் எந்த பெண்ணும் மகிழ்ச்சியாக இருப்பாள்.
சாணக்கியர் கருத்துப்படி தங்களின் தவறுகளை பணிவுடன் மனைவியிடம் ஒத்துக்கொள்ளும் குணம் கொண்ட ஆண்களை பெரிதும் விரும்புவார்கள்.
பெண்கள் தங்களின் துணையை உலகமாகவே பார்க்கும் குணம் கொண்டவர்கள் எனவே ஆண்கள் அவர்களிடம் பணிந்து நடப்பது அவர்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு செல்லும்.
மேலும் சொன்ன வார்த்தைகளை காப்பாற்றும் குணம் கொண்ட ஆண்களுடன் பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்று சாணக்கிய நீதி குறிப்பிடுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |