ஒரே மாதத்தில் தொப்பையை குறைக்கணுமா? இந்த பொருட்களை நீரில் ஊற வைத்து காலையில் குடிங்க
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களின் பிரச்சினையாக காணப்படுவது உடல் எடை அதிகரிப்பு தான்.
இதனால் உடல் ரீதியாக அசௌகரியங்களை எதிர்நோக்குவது மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாகவும் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
தற்காலத்தில் ஆண்கள் பெண்கள் என இருபாலாரும் பெரும்பாலும் வேலைக்கு செல்பவர்களாகவே இருக்கின்றனர்.
இதற்கிடையில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருந்த போதிலும் அதற்காக நேரம் ஒதுக்குவது கடினமானதாகவே அமைகின்றது.
பெரும்பாலானவர்கள் எப்படியாவது தொப்பையை குறைக்க வேண்டும் என குடும்பத்துடன் செலவிட வேண்டிய நேரத்தை கூட ழுமுமையாக ஜிம்மில் செலவிடுகின்றனர்.
இருப்பினும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்ட பின்னரும் எந்த பயனும் இல்லை என புலம்புபவர்கள் தான் அதிகம்.
ஆனால் இயற்கையானதும் எளிமையானதுமான சில வழிமுறைகளின் மூலம் இலகுவாக தொப்பை பிரச்சினைக்கு முடிவுக்கட்ட முடியும். அத்தகைய ஒரு சில முறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எலுமிச்சை நீர்
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முயற்ச்சி செய்பவர்களுக்கு எலுமிச்சை நீர் மிகச்சிறந்த தெரிவாக இருக்கும்.எலுமிச்சையில் ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி ஆகியன நிறைந்து காணப்படுகின்றது.
இவை உடலில் நச்சுநீக்கும் தொழிற்பாட்டுக்கு பெரிதும் துணைப்புரிவதுடன் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி தொப்பை மற்றும் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகின்றது.
இரவு தூங்கும் முன் ஒரு கண்ணாடி குடுவை அல்லது கிளாஸில் எலுமிச்சை துண்டுகளை போட்டு தண்ணீரை நிரப்பி இரவு முழுவதும் ஊறவிட்டு இந்த தண்ணீரை காலை வெறும் வயிற்றில் குடித்துவந்தால் தொப்பை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
வெள்ளரிக்காய் நீர்
வெள்ளரிக்காயில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், உடலை நீரேற்றமாக வைத்துகொள்ளவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
ஒரு கண்ணாடி ஜாரில் நீரை நிரப்பி, அதில் வெள்ளரிக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, இந்த தண்ணீரை காலை வெறும் வயிற்றில் குடித்துவந்தால் தொப்பை விரைவில் குறைய ஆரம்பிக்கும்.
இஞ்சி நீர்
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகின்றது. இந்த இஞ்சி நீரைக் குடிப்பது உடல் எடையை கட்டுக்குள் வைக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
இரவு தூங்கும் முன் நீரில் இஞ்சியைத் துருவிப் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் தொப்பை விரைவில் குறைய ஆரம்பிக்கும்.
புதினா நீர்
புதினா உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற முயற்ச்சியில் இருப்பவர்களுக்கு புதினா ஒரு வரபிரசாதமாக இருக்கின்றது.
இரவில் ஒரு கைபிடியளவு புதினாவை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு, நீரை நிரப்பி இரவு முழுவதும் ஊறவிட்டு அந்த தண்ணீரை காலையில் பருகிவந்தால் தொப்பை ஒரே மாதத்தில் காணாமல் போய்விடும்.
ஆப்பிள் பட்டை நீர்
ஆப்பிள் மற்றும் பட்டை கலந்த நீர் நல்ல சுவையாக இருப்பதுடன் உடல் எடையை துரிதமாக குறைக்கின்றது. இந்த தண்ணீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகின்றது.
ஒரு கண்ணாடி குடுவையில் நீரை நிரப்பி, அதில் பட்டை துண்டுகள் மற்றும் சிறிது ஆப்பிள் துண்டுகளை சேர்த்து இரவு முழுவதும் ஊறவிட்டு காலையில் பருகிவந்தால் தொப்பை விரைவில் குறைவதுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவையும் வெகுவாக குறைக்க உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |