கடைசிவரை போராடி தோற்ற கமல்! மகள் ஸ்ருதி என்ன செய்திருக்காரு தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்
தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட தன் தந்தை கமல் ஹாசன் தோல்வி அடைந்தது குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார் ஸ்ருதி.
கடந்த மாதம் 6ம் தேதி நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன்.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையின்போது முன்னிலை வகித்து வந்த கமல் இறுதியில் தோல்வி அடைந்தார்.
அந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தன் தந்தை கையில் டார்ச்லைட்டுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்டு ஸ்ருதி ஹாசன் கூறியதாவது, என் அப்பாவை நினைத்து எப்பொழுதுமே பெருமைப்படுகிறேன்.
#Fighter #Terminator என்று பதிவிட்டுள்ளார்.