பாரிஸ் டூர் போறீங்களா? செலவே இல்லாமல் பார்க்கக்கூடிய இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!
பிரெஞ்சு நாட்டின் தலைநகரான பாரிஸ் உலகளவில் சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு முக்கிய நகரமாக அறியப்படுகின்றது.
கலை, கலாச்சாரம், வரலாறு மற்றும் நவீனத்துவம் ஆகியவற்றின் கலவையாக திகழும் பாரிஸ் நகரில் ஒவ்வொரு இடங்களும் தனித்துவமான சிறப்புக்கள் கொண்டதாக காணப்படுகின்றது.

மேலும், பாரிஸ் நகரானது ஃபேஷன், உணவு, கலை மற்றும் திரைப்படங்களுக்கு உலகளாவிய மையமாகவும் திகழ்கிறது.
இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் எவ்வளவோ இருந்தாலும் அத்தனையையும் சென்று பார்ப்பதற்கு நம்முடைய பட்ஜெட் தாங்க வேண்டும் அல்லவா?

காஸ்ட்லி நகரமான பாரிஸிலும் குறைந்த செயலவில் எந்தெந்த இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்க்கலாம் என்பதையும், இங்கு சுற்றுலா செல்பவர்கள் தவறவிடவே கூடாத சில முக்கிய இடங்கள் பற்றி இந்த பதிவில் பாரக்கலாம்.
லூவ்ரே அருங்காட்சியகம்

லூவ்ரே அருங்காட்சியகம் பாரிஸில் அதிகம் பார்வையிடப்படும் இடங்களில் ஒன்றாக திகழ்கின்றது. இது ஆண்டுக்கு எட்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் ஈர்க்கின்றதாம்.
பாரிஸில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியமானது நாட்டில் உள்ள பழமையான பிரெஞ்சு கலைப்பொருட்கள் சிலவற்றைக் கொண்டுள்ளது.
மேலும் உலகின் சிறந்த கலைஞர்களின் மறக்கமுடியாத கலைப்படைப்புகளைக் காணக்கூடிய இடங்களில் ஒன்றாக அறியப்படுகின்றது.பாரிஸ்க்கு சென்றால் நிச்சயம் இந்த இடத்தை மட்டும் பார்க்காதல் திரும்பிவிடாதீர்கள்.
நோட்ரே டேம் டி பாரிஸ் கதீட்ரல்

ஐரோப்பாவின் சிறந்த கதீட்ரல்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்ட நோட்ரே டேம் டி பாரிஸ் கதீட்ரல், நகரத்தின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக அறியப்படுகின்றது.
குறித்த தேவாலயத்தின் உள்ளேயும் வெளியேயும் அதன் கண்கவர் கட்டிடக்கலை சிற்பங்களை பார்வையிடுவதற்காகவே சுற்றுலா பயணிகள் கதீட்ரலுக்கு அதிகமாக வருகிகை தருகின்றார்கள்.
மேலும் பாரிஸில் உள்ள ரோமன் கத்தோலிக்கர்கள் அதை மிக உயர்ந்த மதிப்பில் வைத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அங்கு சென்றால், தேவாலயத்தை பார்வையிட்ட பின்னர் சுற்றியுள்ள சந்தைகள் மற்றும் நினைவு பரிசு கடைகள் வழியாக ஒரு நடைப்பயணத்தை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும். இது உங்களுக்கு நிச்சயம் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும்.
ஈபிள் கோபுரம்

பாரிஸில் மிகவும் பிரபலமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா தலமான ஈபிள் கோபுரம் நிச்சயமாக நகரத்தில் அதிகம் பார்வையிடப்படும் நினைவுச்சின்னமாகும். இந்த கோபுரத்தின் மேலிருந்து பார்க்கும் காட்சி முற்றிலும் அற்புதமான தருணமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
மேலும் நீங்கள் சூரிய அஸ்தமனத்தில் மேலே சென்றால், காதல் மற்றும் அமைதியான சூழ்நிலையை வெளிப்படுத்த விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுற்றியுள்ள பூங்காக்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.
மிக உயர்ந்த பார்வை இடங்களுக்குச் செல்ல நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தாலும், மேலிருந்து வரும் காட்சிகள் விலைமதிப்பு அற்றது என்று தான் கூறவேண்டும். சந்தேகத்திற்கு இடமின்றி நீங்கள் தவிர்க்க விரும்பாத ஒரு அனுபவமாக அமையும்.
டிஸ்னிலேண்ட்

பாரிஸ் டிஸ்னிலேண்ட் பாரிஸுக்கு ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தளமாக திகழ்கின்றது.
இங்கு செல்வதால் குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் உற்சாகமான மறக்க முடியாத பல அனுபவங்களை பெற முடியும்.
இந்த அற்புதமான தீம் பார்க்கில், நீங்கள் குடும்பத்துடன் சில தரமான நேரத்தை செலவிடலாம், அதே நேரத்தில் ஐரோப்பாவின் சிறந்த சவாரிகளையும் இங்கு அனுபவிக்கலாம்.
குடும்பங்கள் மற்றும் தம்பதிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதால், சில நல்ல தள்ளுபடிகளும் இங்கு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். பாரிஸ் சென்றால் நிச்சயம் டிஸ்னிலேண்டை மட்டும் மிஸ் பண்ணவே கூடாது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |