சாணக்கிய நீதி: இந்த குணம் கொண்ட பெண்கள் புகுந்த வீட்டை சொர்க்கமாகவே மாற்றிவிடுவார்கள்....
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் சாணக்கியர்.
இவர்களின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏறாளம் பேர் இருக்கின்றனர். வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு வழிக்காட்டியாக இருந்துள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை.
சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் எத்தகைய குணம் கொண்ட பெண்கள் பிறந்த வீட்டை பெருமைப்படுத்துவதுடன் புகுந்த வீட்டை சொர்க்கம் போல் மகிழ்ச்சி நிறைந்த இடமாக மாற்றுவார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பெண்களின் சிறந்த குணங்கள்
சாணக்கிய நீதியின் பிரகாரம் எந்த பெண் திருமண உறவை பெரிதும் மதிக்கும் குணத்தை கொண்டிருக்கின்றாரோ, அவரால் அந்த குடும்பமே அளவில்லாத மகிழ்ச்சியை பெறும்.
எந்த உறவிலும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்ற குணம் கொண்ட பெண்கள் கணவனுக்கு வாழ்நாள் முழுவதும் நம்பிக்கையான துணையாக இருப்பார்கள். இவர்கள் கணவனின் குடும்ப உறவுகளுக்கு உண்டையுள்ளவர்களாக இருப்பார்கள் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
பொய் சொல்லாத மற்றும் ஏமாற்றும் குணம் துளியும் இல்லாத பெண்களுக்கு இறைவனின் அருளும் ஆசீர்வாததுமும் முழுமையாக கிடைக்கும். இவர்கள் இருக்கும் இடம் முழுவதும் நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும்.
ஆடம்பரத்தின் மீது ஆர்வம் கொள்ளாத பெண்கள் வாழ்க்கை துணையாக கிடைப்பதற்கு தவம் செய்திருக்க வேண்டும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். இப்படிப்பட்ட குணம் ஒரு பெண்ணுக்கு இருந்தால், அவரின் புகுந்த வீடு நிதி ரீதியில் உயர்ச்சியடையும் என்பது உறுதி.
தன்னை விட வயதில் பெரியவர்களை மதிக்கும் குணம் கொண்ட பெண்கள் பிறந்த வீட்லும் சரி, புகுந்த வீட்டிலும் சரி அனைவரின் மனதையும் வென்றவர்களாக இருப்பார்கள்.இவர்கள் இருக்கும் இடம் மகிழ்ச்சியாலும் பாசத்தாலும் முழுமையடையும்.
தன்னலம் அற்ற குணம் கொண்ட பெண்கள் திருமண உறவுக்கு மிகவும் பொருத்தமானவர்களான இருப்பார்கள் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். இந்த குணம் கொண்ட பெண்கள் புகுந்த வீட்டில் மற்றவர்களின் தேவைக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். இவர்களில் குடும்பமே மகிழ்சியாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |