புத்தரின் தலையில் சுருள் சுருளாக இருப்பது என்னன்னு தெரியுமா?
பண்டைய காலத்தில் வாழ்ந்த பிரபல்யாமான துறவிதான் புத்தர்.இவரது இயற்பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும்.
Alzheimer's disease symptoms: அல்சைமர் நோய் அறிகுறிகள் எப்படி இருக்கும்? முழுமையான மருத்துவ விளக்கம்
பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்படுகின்றார்.
நீண்ட தலைமுடியும், நீண்ட தாடியும், நீண்ட மீசையுடன் துறவிகள் வாழ்ந்து வந்த காலத்தில், உடலை தூய்மையாக வைத்துக்கொள்ள தலைமுடி, தாடி மீசை ஆகியவற்றை மழித்து துறவு வாழ்வை மேற்கொண்டவர் தான் புத்தர்.
புத்தரும் நிகண்ட நாத புத்திரர் என்ற மகாவீரரும் தான், தங்களது சீடர்கள் தலையை மழித்துக்கொள்ளவேண்டும் என்ற ஒரு புதிய முறையை துறவு வாழ்வில் அறிமுகப்படுத்தினார்கள்.
ஆனால் புத்தரின் தலையில் கிரீடம் போல் ஒரு அமைப்பு இருப்பதை அனைவருமே அவதானித்திருப்போம். பலரும் இதை பாத்து புத்தருக்கு சுருள் முடி என நினைக்கின்றார்கள்.
மழித்த தலையில் இது என்ன வித்தியாசமாக இருக்கின்றது என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
இது கிரீடமோ அல்லது தலை முடியோ இல்லை நத்தைகள் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகின்றதா?ஆம் அதன் பின்னால் இருக்கும் ஒரு சுவாரஸ்யமான கதை தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன காரணம்?
புத்தர் ஒருநாள் மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்துக்கொண்டிருந்தார். அப்போது சூரியக்கதிர்கள் புத்தரின் தலையில் நேரடியாக பட்டது. அந்த நேரத்தில், ஒரு நத்தை தரையில் சென்று கொண்டிருந்தது.
புத்தரின் தியானத்தை கவனித்த நத்தை, சூரியக்கதிர்களால் கவனச்சிதறல் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், உஷ்ணம் புத்தரை தாக்கிவிடக்கூடாது என்பதற்காகவும் சிறிதும் சிந்திக்காது, புத்தரின் தலை வரை சென்று அமர்ந்தது.
இதைப்பார்த்த மற்ற நத்தைகளும், புத்தரின் தலையில் ஏறி அமந்துள்ளது.நத்தைகளின் ஓடுகள் புத்தரின் தலையை சூழ்ந்து கொண்டதால், பார்ப்பதற்கு நேர்த்தியான தொப்பி போல் காணப்பட்டது.
நத்தையின் குளிர்ச்சியான மற்றும் ஈரமான உடல்கள் புத்தரின் தியானத்தை மணிக்கணக்கில் தொடர பெரிதும் துணைப்புரிந்தது. ஆனால் சூரியக் கதிர்களின் கடுமையான வெப்பத்தால் நத்தைகள் காய்ந்து இறந்தன.
மாலையில், புத்தர் தன்னுடைய தியானத்தை கலைத்து பார்த்தபோது, 108 நத்தைகளும் தங்கள் உயிரையும் துறந்து, கவசம் போல தன்னை காத்ததை உணர்ந்தார்.
அந்தவகையில், நத்தைகளின் தியாகத்தை நினைவூட்டும் வகையில்தான், புத்தர் சிலைகளில் இந்த நத்தைகள் இன்றும் வடிவமைக்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |