பூனை குறுக்கே சென்றால் துரதிஷ்டமா? உண்மை காரணம் இது தான்...
சாஸ்திரத்தின் அடிப்படையில் நாம் வெளியே செல்லும் போது பூனையை பார்த்தாலோ அல்லது பூனை குறுக்கே போனாலோ இது கெட்ட சகுணம் என நம்பப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக வெளியில் செல்லும் போது பூனையைக் கண்டால், சிறிது நேரம் நின்று,தண்ணீர் குடித்துவிட்டு செல்ல வேண்டும் என்ற வழக்கம் இந்து சாஸ்திரத்தில் பின்பற்றப்படுகின்றது.
முன்னோர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் பூனைகள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகமாக ஈர்க்கும் தன்மை கொண்டது.
மேலும் பூனை இடமிருந்து வலமாக நகர்ந்தால், அது மோசமான அறிகுறி என்றும் வலமிருந்து இடமாக நகர்ந்தால், அது மங்களகரமான அறிகுறி என்றும் நம்பப்படுகின்றது.
பூனை தொடர்பாக பார்க்கப்படும் சகுணங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மை காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அறிவியல் காரணம் என்ன தெரியுமா?
முன்னைய காலங்களில் மக்கள் காடு வழியாகச் பயணம் செய்ய வேண்டிய தேவை அதிகமாக இருந்தது. தற்காலத்தில் காணப்படுவதை போன்று அப்போது வாகன வசதி எதுவும் கிடையாது.
மாட்டு வண்டி அல்லது குதிரை வண்டி ஆகியன மாத்திரமே காணப்பட்டது.அதில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் பொரும்பாலும் இரவில் பணயம் செய்யும் வழக்கம் காணப்பட்டது.
பூனைகள் இரவில் வேட்டையாடும்.அதனால் பூனைகளின் கண்கள் இரவில் ஒளிரும். குதிரைகள், காளைகள், பறவைகள் போன்ற விலங்குகள் இரவில் பூனையின் கண்களைக் கண்டு பயப்படுகின்றன.
மாட்டு வண்டியில் பயணம் செய்யும் போது பூனை குறுக்கே சென்றால் மாடுகள் பூனையை பார்த்து பயந்து திசைமாறி செல்லவும் விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்பு காணப்படுகின்றது.
அதன் காரணமாகத்தான் பூனை குறுக்கே சென்றால் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு செல்ல வேண்டும் என்ற வழக்கம் பின்பற்றப்பட்டது.
இதுவே பிற்காலத்தில் அறியாமை காரணமாக பூனை குறுக்கே சென்றால் துரதிர்ஷ்டம் என கருதப்படுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |