இரத்தத்திற்கு ஏன் சிவப்பு நிறம் தெரியுமா? அறிவியல் ரகசியம்
பொதுவாகவே இந்த உலகத்தில் காணப்படும் ஒவ்வொரு விடயத்துக்கு, பொருளுக்கும், உயிர்களுக்கும் பின்னாலும் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும் ஆனால் நம்மால் அவை அனைத்தையும் தெரிந்துக்கொள்ள முடியாது.
ஆனால் ஆராய வேண்டும் என்று எப்போது முடிவு செய்கின்றோமோ அப்போது தான் நமது அறிவை வளர்த்துக்கொள்ள ஆரம்பிக்கின்றோம் என்று அர்த்தம்.

அப்படி அனைத்து கேள்விகளுக்கும் விடையை கண்டுப்பிடிக்க முடியாவிட்டாலும் வாழும் காலத்தில் முடிந்தளவுக்கு விடை தேடும் முயற்ச்சியில் ஈடுபடுவது தான் ஒரு மனிதன் எந்தளவுக்கு அறிவாளியாக மாறுகின்றான் என்பதை முடிவு செய்கின்றது.
அந்தவகையில் உலகில் எத்தனையே வண்ணங்கள் இருந்தாலும் மனிதனின் ரத்தம் சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?இரத்தம் சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு காரணம் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

என்ன காரணம்?
பொதுவாக குருதியில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், குருதி சிறுதட்டுக்கள் (platelets) மற்றும் பிளாஸ்மா ஆகிய நான்கு உள்ளடக்கங்கள் காணப்படுகின்றது.
அதில் குருதியின் சிவப்பு நிறத்துக்கு அதில் உள்ள சிவப்பு அணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபின் என்ற புரதம் தான் முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்த புரதம்தான் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை கொடுப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

ஹீமோகுளோபின், நுரையீரலில் இருந்து உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதற்கும், கார்பன் டை ஆக்சைடை மீண்டும் நுரையீரலுக்குக் கொண்டு வருவதற்கும் துணைப்புரிகின்றது.
இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் (RBCs) சிவப்பு நிற செல்கள் அல்லது எரித்ரோசைட்டுகள் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
குறித்த சிவப்பு அணுக்களுக்களில் ஹீமோகுளோபின் என்ற புரதம் காணப்படுகின்றது.

இந்த ஹீமோகுளோபினில் உள்ள இரும்புச்சத்து, ஆக்ஸிஜனுடன் சேரும் பட்சத்தில் ஒளியை உறிஞ்சி பிரதிபலிக்கும் போது தான் இரத்தத்திற்கு சிவப்பு நிறம் கிடைக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |