மாரடைப்பை தடுக்கணுமா? அப்போ தினசரி உணவில் இந்த பொருட்களை தவிர்க்காதீர்கள்
பொதுவாகவே உடலில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளில் இதயம் முக்கிய இடம் வகிக்கின்றது. இதயத்தில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட அது உடலில் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக அமையும்.
அந்தவகையில் மாரடைப்பு என்பது ஒரு நாளில் ஏற்படுவது கிடையாது. உடல்நிலைகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள் தீவிரமாகும் போது தான் இதயம் செயலிழந்து மாரடைப்பு ஏற்படுகின்றது.
அதாவது இதயத்துக்கு குருதியை வழங்கும் ரத்த குழாயில் ஏற்படும் தடையே மாரடைப்புக்கு காரணமாகின்றது.
உடல் முழுவதும் தூய இரத்தத்தை பம்ப் செய்யும் உறுப்பு தான் இதயம். இதன் தொழிற்பாடு இன்றியமையாதது.
அதில் தமனிகள் வழியாக இரத்தம் இதயத்தை அடைகிறது. ஆனால் அப்படிப்பட்ட தமனிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர ஆரம்பித்தால் இதயத்துக்கு குருதி செல்லும் பாதையில் தடையை ஏற்படுத்துகின்றது இதுவே மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணமாகும்.
கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தடுப்பதில் வீட்டு சமையில் அறையில் இருக்கும் சில பொருட்கள் பெரும் பங்காற்றுகின்றது.
இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும் மாரடைப்பு ஏற்படுவதை எளிமையாக தடுக்கலாம். அப்படிப்பட்ட சமையலரை பொரும்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மஞ்சள்
மஞ்சள் பல நூற்றாண்டுகளாக புற்றுநோய் மற்றும் இதய கோளாறுகளை தடுப்பதில் முக்கிய இடம் வகிக்கின்றது.
இதில் குர்குமின் எனப்படும் வேதிப்பொருளில் காணப்படும் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நாள்பட்ட அழற்சி நுரையீரல் நோய்கள், கணைய அழற்சி, குடல் பிரச்சினைகள், இதய கோளாறுகளை தடுக்கும் தன்மை கொண்டது.
குறிப்பாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதில் குர்குமின் பெரிதும் துணைப்புரிகின்றது அதழன தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை தொன்று தொட்டு சமையில் வாசனை மற்றும் சுவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இது இதய நோய்களுக்கு சிறந்த தீர்வாக திகழ்கிகின்றது. மேலும், இது உடலில் நல்ல இரத்த ஓட்டத்தை அனுமதிக்கிறது மற்றும் எந்தவொரு உட்புற அடைப்புகளிலிருந்தும் உடலைப் பாதுகாக்கும் தன்மையை கொண்டுள்ளதால் இது மாரமைப்புக்கு சிறந்த நிவாரணியாக அறியப்படுகின்றது.
மிளகு
மிளகு சமையலில் தினசரி பயன்டுத்துவதால் கொழுப்பு செல்களை உடைக்கவும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் பெரிதும் உதவுகிள்னறது.
மிளகு பைபரின் குறிப்பிடத்தக்க ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளதால், இது செரிமானம், நுரையீரல் தொற்று, இருமல் மற்றும் சளி போன்றவற்றுக்கு தீர்வு கொடுப்பதுடன் மாரடைப்பு அபாயத்தையும் கணிசமாக குறைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |