availability heuristic bias: நீங்க நம்புவதற்கும் உண்மைக்கும் இடையில் இப்படியொரு விடயம் இருக்கா?
பொதுவாக நாம் ஒரு விடயத்தை அதிக தடவைகள் பார்க்கின்றோம் என்பதற்காக அது அதிக தடவைகள் நடக்கின்றது என அர்த்தம் கிடையாது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
இது என்ன புது கதையாக இருக்கின்றது அது தானே உண்மை என்று தானே சிந்திக்கின்றீர்கள். ஆனால் நமது மூளை ஏற்படுத்திக்டிகொள்ளும் பிரம்மை தான் சில விடயங்களை நாம் பெரிதாக நினைத்துக்கொள்வதற்க காரணம்.

அதாவது கிடைக்கும் தன்மை ஹூரிஸ்டிக் சார்பு (The availability heuristic bias) என்ற கருத்தியலின் அடிப்படையில் நாம் அரிதாக நடக்கும் விடயங்களை நினைத்து தான் அதிகம் பயப்படுகின்றோம் என குறிப்பிடப்படுகின்றது.
பெரும்பாலான மக்கள் எதையாவது எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தால், அது முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள், மேலும் அவர்கள் இந்தத் தகவலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, எதிர்காலத்தில் இதே போன்ற நிகழ்வுகள் நிகழும் சாத்தியக்கூறுகளை மிகைப்படுத்தி மதிப்பிடுகிறார்கள் என ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கிடைக்கும் தன்மை ஹூரிஸ்டிக் சார்பு
கிடைக்கும் தன்மை ஹூரிஸ்டிக் சார்பு என்பது நமது மூளை பயன்படுத்தும் ஒரு மன குறுக்குவழியாகும், இது உதாரணங்கள் எவ்வளவு எளிதாக நினைவுக்கு வருகின்றன என்பதன் அடிப்படையில் விரைவான முடிவுகளை எடுக்கிறது.
உண்மைகள் அல்லது நிகழ்தகவுகளை கவனமாக பகுப்பாய்வு செய்வதற்குப் பதிலாக, நாம் மிக எளிதாக நினைவில் கொள்ளக்கூடியவற்றை மட்டுமே நமது மூளை அதிகம் நம்பியிருக்கின்றது.

உதாரணமாக, சமீபத்தில் செய்திகளில் ஒரு விமான விபத்து பற்றி கேள்விப்பட்டிருந்தால், விமானப் பயணம் ஆபத்தானது என்று நாம் நம்பத் தொடங்குகின்றோம். ஆனால் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அது பாதுகாப்பான போக்குவரத்து முறைகளில் ஒன்றாகும்.
உண்மையில் விமான விபத்துக்கள் மிக மிக அரிதாகவே நிகழ்கின்றது. ஆனால் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை விமான விபத்துக்களில் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட ஆயிடம் மடங்கு அதிகம்.

ஆனால் இது பெரியளவில் பேசப்படாத காரணத்தால் நமது மூளை அது குறித்து நினைவில் வைத்துக்கொள்வது குறைவு.
ஏதாவது நினைவில் கொள்வது எளிதாக இருந்தால், அது மிகவும் பொதுவானதாகவோ அல்லது நடக்கக்கூடியதாகவோ இருக்க வேண்டும் என்று நமது மூளை நம்புகின்றது.
இந்தச் சார்பு நமது நினைவாற்றல் எவ்வாறு செயல்படுகிறது என்பதோடு ஆழமாகப் பிணைந்துள்ளது.
வியத்தகு, உணர்ச்சிபூர்வமான அல்லது பரவலாக விவாதிக்கப்படும் நிகழ்வுகள் நம் மனதில் நீண்ட நேரம் நிலைத்திருக்கும். இது நமது மூளை எவ்வாறு இயங்குகின்றது என்பதுடன் தொடர்புடைய முக்கிய விடயமாகும்.

அதனால்தான், நுளம்பு கடியால் ஏற்படும் இறப்பை விட சுறா தாக்குதல்களுக்கும் சிங்கத்தின் தாக்குதல்களுக்கும் மக்கள் பெரும்பாலும் அஞ்சுகிறார்கள்.
குற்றங்கள் அல்லது பேரழிவுகள் போன்ற சில நிகழ்வுகளை மட்டும் ஊடகங்கள் தொடர்ந்து வெளிப்படுவது, அவை உண்மையில் எவ்வளவு அடிக்கடி நிகழ்கின்றன என்பது பற்றிய நமது உணர்வை சிதைத்துவிடுகின்றது.ஊடகங்கள் இந்த உணர்வை ஏற்படுத்துவதில் பெருமளவில் தாக்கம் செலுத்துகின்றது.
இந்த சார்பைப் புரிந்துகொள்வது முக்கியம், ஏனெனில் இது நிதித் தேர்வுகள் முதல் அபாயங்களை மதிப்பிடுவது அல்லது மக்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய கருத்துக்களை உருவாக்குவது வரை ஒவ்வொரு நாளும் நமது முடிவுகளைப் பாதிக்கிறது.

இதைப் பற்றி அறிந்திருப்பது நாம் இந்த நம்பிக்கையை உண்மைகளின் அடிப்படையில் வைத்திருக்கிறோமா? அல்லது நம் மனதில் புதிதாக உள்ளவற்றின் அடிப்படையில் வைத்திருக்கிறோமா? என்பது பற்றிய புரிதலை ஏற்படுத்த பெரிதும் துணைப்புரிகின்றது.
ஒரு விடயம் பற்றி பெரியளவில் பேசப்படுகின்றது என்பதனால் மட்டுமே அதனால் ஆபத்து அதிகம் என்று அர்த்தம் கிடையாது என்பதே இந்த சார்பு கொள்கை அறிவுறுத்தும் முக்கிய விடயம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |