இந்த குணமுள்ள நண்பர்கள் பாம்பை விட ஆபத்தானவர்கள்... எச்சரிக்கும் சாணக்கியர்
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.
சாணக்கியரின் கொள்கைகைளையும் கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது தான் சாணக்கிய நீதி நூல்.
இவரின் கருத்துக்களையும் கொள்கைகளையும் பின்பற்றி வாழ்வில் வெற்றியடைந்தவர்கள் ஏராளம். இந்த நவீன யுகத்திலும் சாணக்கியரின் கருத்துக்களுக்கு உண்டான மதிப்பும் மரியாதையும் உயர்ந்துக்கொண்டே தான் செல்கின்றது.
சாணக்கிய நீதியில் வாழ்ககைக்கு தேவையான பல்வேறு விடயங்கள் குறித்து தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஒருவர் வாழ்வில் எல்லா பருவங்களிலும் பல்வேறு விதமான மனிதர்கள் கடந்து வர வேண்டி இருக்கின்றது. இதில் நண்பர்களை தெரிவு செய்வதில் உள்ள சூட்சுமம் குறித்து சாணக்கிய நீதியில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நண்பர்களை எப்படி தெரிவு செய்ய வேண்டும்?
சாணக்கிய நீதியானது மனிதர்களின் குணங்களை துல்லியமாகக் கணிப்பதறதகான அறிவை நமக்கு கொக்கின்றது.
சாணக்கியரின் கருத்துக்களின் பிரகாரம் ஒருவர் நண்கர்களை தெரிவு செய்வது அவர்களின் வாழ்க்கை பாதையை தெரிவு செய்வதற்கு நிகரானது என்கின்றார்.
காரணம் நல்ல குணம் கொண்ட நண்பர்களால் நமது வாழ்க்கை வெற்றியை நோக்கி செல்லும் மாறாக தீய குணங்கள் கொண்ட நண்பர்கள் பாம்பை போன்றவர்கள் இவர்களில் எப்போது நமக்கு ஆபத்தை மட்டுமே பரிசாக கொடுக்க முடியும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
பாம்புகளைப் போல, சில மனிதர்கள் எப்போதும் தங்களின் செலலில் விஷதன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களை இனங்கண்டுக்கொண்டால் அவர்களிடமிருந்து விலகியிருப்பது அவசியம்.
தங்களை வளர்த்த பெற்றோருக்கான உழைத்துக்கொடுக்காதவர்கள், அவர்களை அவமதிப்பவர்கள் மிகவும் மோசமான விஷமிகள் என சாணக்கியர் குறிப்படுகின்றார். இத்தகைய குணம் கொண்டவர்கள் யாரின் வாழ்க்கையையும் நல்ல பாதையில் செல்லவிட மாட்டார்கள்.
சாணக்கிய நீதியின் பிரகாரம் போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் தங்களின் மனைவி மற்றும் பிள்ளைகளை கவனிக்காது சுயநலனுக்காக வாழ்பவர்கள் பாம்பை போன்றவர்கள் இவர்களுடன் நட்பு கொள்வது உங்களுக்கும் பெரிய அழிவை கொடுக்கும்.
மேலும் வாழ்வில் நீதி, நேர்மைக்கு முக்கியதுவம் கொடுக்காதவர்களுடன் நட்பு கொள்வதால் உங்களின் வாழ்க்கையும் தவறான பாதையில் செல்லும் இவ்வாறான நட்பை முளையிலேயே கிள்ளி எறியுங்கள் என சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |