கோடிகளில் விலை போகும் “திமிங்கலத்தின் வாந்தி” ஏன்? எதற்கெல்லாம் பயன்படும்?
Ambergris அல்லது திமிங்கலத்தின் வாந்தி என்பது ஒரு வகையான கழிவுப்பொருளே, அதாவது ஸ்பெர்ம் திமிங்கலத்தின் செரிமான உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக்கழிவுப் பொருள் ஆகும்.
பொதுவாக, திமிங்கிலம் தனது இரையை வேட்டையாடும்போது இந்த வகையான மெழுகுபோன்ற திரவத்தைப் பயன்படுத்துகிறது.
குறிப்பாக, திமிங்கிலம் தனக்கு பிடித்த Cuttlefish எனப்படும் கணவாய் மீன்கள், ஆக்டோபஸ்களை வேட்டையாடி விழுங்கும்போது, அந்த மீன்களின் கூறிய உறுப்புகள், முட்கள் மற்றும் பற்களால் திமிங்கலத்தின் உள் உறுப்புகளில் காயம் ஏற்படவும், செரிமான பிரச்சனையும் ஏற்படவும் மிக அதிக அளவு வாய்ப்பிருக்கிறது.
அதைத் தடுப்பதற்காக இயற்கையிலேயே கொடுக்கப்பட்ட ஒரு தற்காப்பு கவசம்தான் Ambergris எனப்படும் மெழுகுபோன்ற திரவம்.
இந்த பொருளை திமிங்கலம் வெளியேற்றும் போது, கடலின் மேல் பகுதியில் மெழுகு போன்று மிதக்கும்.
அந்த அபூர்வ மெழுகானது மருத்துவ பொருள் தயாரிக்கவும், விலை உயர்ந்த வாசனை திரவங்களை தயாரிக்கவும் பயன்படுகின்றது.
பார்ப்பதற்கு பாறாங்கல் போன்று காட்சியளிக்கும் Ambergris, சாம்பல், ப்ரவுன் மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும்.
முதலில் துர்நாற்றம் வீசக்கூடியதாக இருந்தாலும், பின்னர் நேரம் செல்லச் செல்ல ஆளை தூக்கும் திரவ பொருள் போல் அதன் நறுமணம் இருக்குமாம்.
ஆனால் நறுமணத்தைத் தக்கவைக்க Ambergris-ஸிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அம்ப்ரின் எனும் ஆல்கஹாலை பயன்படுத்தும் ஆடம்பர வாசனை திரவிய நிறுவனங்களால் இது பெரிதும் விரும்பப்படுகிறது.
மருத்துவத்துறையில், Ambergris பால்வினை சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தரும் மருந்தாக விளங்குகிறது.
மேலும், யுனானி மருத்துவத்தில் பல்வேறு மூலிகைகளுடன் சேர்க்கப்பட்டு மூளை, நரம்பு, பாலுறவு போன்ற உடல்சார்ந்த பிரச்னைகளுக்கும் தீர்வாக விளங்குகிறது.