'இது' தெரியாமல் Personal loan வாங்காதீங்க- இதற்குள் இவ்வளவு விஷயம் இருக்கா?
சிலர் திருமண தேவைகள், மருத்துவ தேவைகள், வீடு கட்டுதல் போன்ற தேவைகளுக்காக நாம் வேலைச் செய்யும் இடங்கள், வங்கிகள் ஆகிய இடங்களில் Personal loan சேவையை பெற்றுக் கொள்வோம்.
இந்த சேவை நம்முடைய உடனடி பண தேவையை பூர்த்தி செய்யும். இதனால் மக்கள் மத்தியில் Personal loan மிக பிரபலமாகவுள்ளது.
இப்படி இருக்கும் பொழுது சிலர் Personal loan பற்றி முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளாமல் அக்கம் பக்கத்தினர் சொல்வதை கேட்டு சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள்.
அந்த வகையில், Personal loan எடுக்கும் பொழுது என்ன மாதிரியான நன்மை, தீமைகளை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
Personal loan- னால் கிடைக்கும் பலன்கள்
1. Personal loan குறிப்பிட்ட சில நாட்களில் கைக்கு பணம் கிடைத்து விடும்.
2. திருமணம் முதல் மருத்துவ செலவுகள் வரையிலான தேவைகளுக்கு அந்த சமயத்தில் பயன்படுத்த முடியும். loan எடுக்கும் காரணத்தை சரிச் செய்து விடலாம்.
3. Personal loan, Unsecured Loan என்ற வகைக்குள் வரும். இதனால் எந்த பொருளையும் பணத்திற்கு பதிலாக கொடுக்க வேண்டிய தேவை இருக்காது.
4. பெரும்பாலான Personal loan குறிப்பிட்டதொரு வட்டி விகிதத்தின் படி கொடுக்கபட்டிருக்கும். பணம் காட்டாமல் இருந்தால் கூட வட்டி ஏறாது.
Personal loan வாங்குவதால் இவ்வளவு பிரச்சினைகளா?
1. Personal loan, Unsecured Loan வகைக்குள் இருப்பதால் அளவு அதிகமான வட்டி விகிதங்கள் அறவிடப்படுகின்றது. அதிகமான தொகையை திருப்பி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
2. Personal loan எடுப்பதால் உங்களின் Credit score பாதிக்க வாய்ப்பு உள்ளது. சரியான நேரத்தில் பணத்தை செலுத்தாவிட்டால் Credit score குறைய ஆரம்பிக்கும்.
3. கடன் வழங்குனர்கள் Personal loan கட்டணங்கள் வழங்க தாமதமாக இருந்தால் அபராதங்கள் மற்றும் Pre-payment செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
4. Personal loan வாங்கினால் அதனை புத்திசாலித்தனமாக திருப்பி செலுத்தி விட வேண்டும். அதனை மீறும் பட்சத்தில் மிகப்பெரிய கடன் சிக்கலில் மாட்டி கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |