ஜாதகத்தில் சூரியன், சனி வந்தால் என்னவாகும்? எந்த மாதத்தில் பணவரவு உண்டு?
ஒரு குழந்தை பிறந்த தினத்தன்று, பிறந்த நேரத்தில் வானில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் கிரகங்களின் இருப்பு நிலையை கொண்டு ஜாதகம் எழுதப்படுகிறது, இதனை எளிதில் விளங்கும்படி கட்டங்களில் எழுதி வைப்பார்கள்.
அதிலும் சனி மற்றும் சூரியனுக்கான நிலை மிக உன்னதமானதாகும்.
சனி
சனி என்றால் நீதிமான் என்று பொருள். சனி சுயநலக்காரர்களுக்கு கெடு பலனை வழங்குவார். சனி பொதுப்புத்தியை தனக்குள் கொண்டது.
யாராக இருப்பினும் பொது சமூகத்தின் அறத்திற்கு பாதகம் விளைவிக்காமல், சமூகத்துடன் ஒத்திசைந்து வாழ வேண்டும் என்று படிப்பினை கொடுக்கும் கோள்.
சூரியன்
கிரகங்களின் ராஜாவான சூரியனுக்கு ஜோதிடத்தில் சிறப்பு முக்கியத்துவம் உண்டு.
சூரியன் பொதுவாக வேலைகள், தலைமைத்துவ திறன்கள், மரியாதை, புகழ் மற்றும் சமுதாயத்தில் கருணை ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறார்.
சூரியன் உலகின் ஆன்மா வடிவமாக கருதப்படுகிறது, இதன் காரணமாக முழு உலகமும் ஆற்றலையும் பலத்தையும் பெறுகிறது.
சூரியனும் சனியும் ஒன்றாக சேர்ந்து வருவதால் ஏற்படும் சாதக மற்றும் பாதகமான விளைவுகளை பற்றி அறிந்துக்கொள்ள இந்த காணொளியை நோக்குங்கள்.