இரவில் பப்பாளி சாப்பிடுகிறீர்களா? இந்த பிரச்சனைகள் ஏற்படுமாம்
சத்துக்கள் நிறைந்த பப்பாளியை இரவில் சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பப்பாளி
பொதுவாக பழங்களில் சத்துக்கள் அதிகமாகவே இருக்கின்றது. பப்பாளியில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்ற சத்துக்கள் உள்ளது.
இவை செரிமானத்தினை மேம்படுத்தவும், எடையை கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இதய ஆரோக்கியத்தினையும் பராமரிக்கின்றது.
இவ்வளவு நன்மைகள் உள்ள பப்பாளியை சிலர் எடுத்துக்கொண்டால் உடலில் சில பிரச்சனையை சந்திக்க நேரிடும். இதிலும் இரவில் சாப்பிட்டால் என்ன பிரச்சனை ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நன்மைகள் என்ன?
பப்பாளியில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதாக கோடை காலத்திற்கு ஏற்ப சிறந்த பழகமாக கருதப்படுகின்றது. தினமும் பப்பாளியை எடுத்துக் கொள்வது உடம்பிற்கு தேவையான நீர்ச்சத்தையும், உடலை புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் வைத்திருக்க உதவுகின்றது.
இதிலுள்ள பாப்பைன் என்ற இயற்கையான நொதி, உணவில் உள்ள புரதங்களை எளிதில் செரிமானம் செய்ய உதவுகின்றது. கோடைக்காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல், வாயு தொல்லை, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைக்கு தீர்வு அளிக்கின்றது.

பப்பாளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் செய்கின்றது.
முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் வராமல் பாதுகாக்கின்றது. சருமத்தில் உள்ள சுருக்கங்களை குறைப்பதுடன், இயற்கையான பொலிவையும் கொடுக்கின்றது.

எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பப்பாளி சிறந்த தேர்வாக இருக்கின்றது. கலோரி குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது. மேலும் வயிறு நிறைந்த உணர்வை அளிப்பதுடன், பசி எடுப்பதையும் தடுக்கின்றது.
எந்த நேரம் சாப்பிடலாம்?
பப்பாளி பழத்தினை சாப்பிட சரியான நேரம் காலையில் சாப்பிடுவது சிறந்ததாகும். அவ்வாறு இல்லையெனில் மதிய உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவோ அல்லது மதிய உணவின் போதோ எடுத்துக் கொள்ளலாம்.

இரவில் தாமதமாக பப்பாளியை சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். ஏனெனில் சிலருக்கு வாயு மற்றும் வயிற்றில் கனமான உணர்வை அளிக்கின்றது.
ஆனால் கர்ப்பிணிகள் பப்பாளியை பழுக்காமலோ, பச்சையாகவே சாப்பிடுவது கூடாது. ஏனெனில் இவை அதிக தீங்கை விளைவிக்குமாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |