நேர்காணலை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே எந்த துறைசார்ந்த வேலைக்கு விண்ணப்பித்தாலும் கட்டாயமாக நேர்காணலுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படுகின்றது.
முதல் முறையாக நேர்காணலுக்கு செல்லும் ஒருவராக இருந்தாலும் சரி ஏற்கனவே ஒரு வேலையில் இருப்பவரும் அதைவிட ஒரு பெரிய வேலைக்கு விண்ணப்பிக்கும் போது கட்டாயம் ஒரு நேர்காணலை சந்திக்க வேண்டி ஏற்படுகின்றது.
ஆனால், நேர்காணல்களை எதிர்கொள்ளும் போது பலரும் பதட்டத்தில் இருப்பார்கள். இந்த பதட்டத்தை குறைத்துக்கொள்ளவும் நேர்காணலை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும் சில விடயங்களை பின்பற்றினால் போதும் இது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த விடயங்களை கட்டாயம் கவனீங்க...
முக்கியமாக நேர்காணலுக்கு செல்லும் போது சுய விவரக்குறிப்பை நேர்காணலுக்கு எடுத்துச் செல்லும் போது முறையாக தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
சுய விவரக்குறிப்பு மென்பொருள் வடிவமாக மாத்திரம் கொண்டு செல்லாமல் நகல் வடிவிலும் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். அதனால் தன்னம்பிக்கையுடன் நேர்காணலுக்கு முகம்கொடுக்க முடியும்.
உடலை நீர்ச்சத்து நிறைந்ததாக வைத்து கொண்டிருப்பதால் நமக்கு மனதளவிலும் ஆற்றல் அதிகரிக்கும். எனவே, தண்ணீர் பாட்டில்களை, நேர்காணல்களின் போது கையோடு எடுத்து செல்வது வெற்றிக்கு துணைப்புரியும்.
நேர்காணல்களின் போது வேலைகளின் சாம்பிள்களை ஒரு ஃபைலாக தொகுத்து கையில் எடுத்து வைத்திருப்பது உங்களின் நேர்த்தியை எடுத்துக்காட்ட துணைப்புரியும்.
தற்போது பலரும், தங்களது வேலைகளை லிங்க் ஆகவோ, பென் டிரைவிலோ வைத்துக் கொள்வது வழக்கமாக இருக்கும்.
ஆனால், இதை கையிலும் ஒரு நகலாக வைத்திருப்பது உங்களது வேலைகளை நீங்களே எடுத்து காட்டுவதனால் இவகுவாக நேர்காணல்களின் உங்களின் தயார் நிலையை நிரூபிக்க துணைப்புரியும்.
நேர்காணலுக்கு ஒரு நோட்பேட் மற்றும் பேனாவைக் எடுத்துச் செல்வதனால் உங்களின் அக்கறையும் தனித்துவமும் வெளிப்படும். மேலும் வேலை விடயத்தில் நீங்கள் எவ்வளவு அக்கறையுடையவர் என்பதும் இதன் மூலம் வெளிப்படும்.
மேலும் கைகளில், கைக்குட்டை அல்லது டிஷூ வைத்துக்கொள்வது தனிப்பட்ட சுகாதாரத்தில் உங்களின் அக்கறையை எடுத்துக்காட்டுவதுடன் நேர்காணலில் பொலிவுடன் இருப்பதற்கும் இது துணைப்புரியும்.
உங்களுக்கு தேவையான பொருட்களை முன்னரே ஆயத்தம் செய்து ஒரு பையில் எடுத்துச் செல்வதனால் பிறரிடம் உதவி கேட்பதை தவிர்த்துக்கொள்ளலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் தன்னம்பிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது. எதையும் ஏற்றுக்கொள்ளும் மனபான்மையுடன் நேர்காணலுக்கு முகம்கொடுக்க வேண்டும். இந்த விடயங்களை பின்பற்றினால் வெற்றி நிச்சயம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |