தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்?
பலரது இல்லங்களில், தினமும் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் இருப்பர். அப்படி, தினமும் 45 நாட்களுக்கு வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளும்.
நடுத்தரவர்க்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் வயிறு முழுமையாக வேண்டும் என்று நினைத்து சாப்பிடும் ஒரே உணவு வாழைப்பழம்தான். வாழை சம்பந்தமான பொருட்கள் மட்டும்தான், வருடத்தின் அனைத்து நாட்கள்ம் தடையின்றி கிடைக்கக்கூடிய ஒரே முழுமையான இயற்கை உணவாக இருப்பது வாழைப்பழம்தான். இதனை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். அடிக்கடி கிடைக்கும் இந்த பழத்திலும், உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன.

உடலுக்கு உடனடி ஆற்றல்!
வாழைப்பழத்தை பலரும், காலை உணவாகவும் மாலை சிற்றுண்டியாகவும் சாப்பிடுவர். இது, உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் உணவுப்பொருள் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில், தொடர்ந்து 45 நாட்களும் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், அவருடைய உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று சில மருத்துவ ஆய்வுகள் சில அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன.
United States Department of Agriculture (USDA) கூற்றின் படி, 100 கிராம் பழுத்த வாழைப்பழத்தில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன தெரியுமா?
கலோரிகள் : 89 KCAL கொழுப்பு : 0.33 கிராம் சோடியம் : 1.மில்லி கிராம் கார்போஹைட்ரேட் : 22.80 கிராம் நார்ச்சத்து : 2.60 கிராம் புரதம் : 1.09 கிராம் பொட்டாசியம் : 358 மில்லி கிராம் உள்ளிட்டவை உள்ளது.

வாழைப்பழத்தின் நன்மைகள் என்ன?
வாழைப்பழத்தில், பொட்டாசியம் அதிகளவில் இருக்கிறதாம். இது, இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, ரத்த அழுத்ததை சீராக வைத்து தசை செயல்பாட்டிற்கும் உதவுகிறது. இதில் இருக்கும் இயற்கை சர்க்கரை, கார்போஹைட்ரேட்டும் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறதாம். இதனால், காலை உணவாகவும், உடற்பயிற்சிக்கு முன்னர் அல்லது பின்னர் இதனை சிற்றுண்டியாக சாப்பிடவும் இது சிறந்த உணவாக இருக்குமாம்.
இது மட்டுமன்றி, இதில் வைட்டமின் பி6 உள்ளடக்கம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில வைட்டமின்களும் உள்ளதாம். குறிப்பாக, செரோடோனின் என சொல்லப்படும் ஹார்மோன் சுரப்பை இது தூண்டி, மனநிலையை சீராக்கவும் உதவும் என தெரிய வருகிறது. இதில் இருக்கும்

ஆண்டி-ஆக்ஸிடெண்ட்கள் உடலின் செல்களை பாதுகாக்க்ம். இது, உடலை எப்போதும் நீரேற்றுத்துடன் வைத்திருப்பதோடு பசி அதிகமாக ஏற்படுத்துவதையும் குறைக்குமாம்.
மருத்துவ ஆய்வுகள் என்ன சொல்கிறது?
வாழைபழங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, லைப்ரரி ஆஃப் மெடிசினில் ஒரு ஆய்வு வெளியானது. அதன்படி, வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம், பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு, அமிலங்கள், வைட்டமின் சி மற்றும் இ உள்ளிட்ட உடலுக்கு நன்மை செய்யும் பல கூறுகள் நிறைந்திருக்கிறதாம்.
தினமும் ஒரு வாழைப்பழம் வீதம், தொடர்ந்து 45 நாட்களும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், அதன் ஊட்டச்சத்துகள் சிரான ரத்த அழுத்தத்திற்கும், மேம்பட்ட செரிமானத்திற்கும், இதய ஆரோக்கியம் மேம்படவும் உதவுமாம்.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், அதிக கலோரி இருப்பவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடும் போது இது கூடுதலாக கலோரியை உடலில் ஏற்ற வழிவகுக்கும் என்பதால் உடல் எடையும் கூடலாம். எனவே, அவர்கள் தாங்கள் தேர்தேடுக்கும் வாழைப்பழத்தை வைத்து கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மேலும், இது தீவிர சிறுநீரக குறைபாடு இருக்கும் நோயாளிகளுக்கு பொட்டாசியத்தை வெளியேற்றும் திறனையும் கொடுக்குமாம். இதனால் பொட்டாசியம் அளவு அதிகரிக்கும் அபாயமும் உள்ளதாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |