அவரைக்காய் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
நம் அன்றாட உணவில் அவரைக்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
அவரைக்காய்
காய்கறி வகைகளில் ஒன்று தான் அவரைக்காய். இதில் நாட்டு அவரை, கொத்தவரை என நிறைய வகைகள் உள்ளன. அது மட்டுமின்றி இது பெரியோர், சிறியோர் என அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு காய் ஆகும்.
இதை நாம் சாப்பிடுவதன் மூலம் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கிறது. இதில் புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து உள்ளன. இதனை நாம் உணவில் எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் என்பதை தெரிந்து கொள்வோம்.

நன்மைகள் என்ன?
அவரைக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் நமது செரிமான அமைப்பை சீர்ப்படுத்த உதவுகிறது.
அது மட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

மேலும் இதில் கிளைசெமிக் குறைவாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவும் சீராக இருப்பதற்கு உதவியாக இருக்கின்றது.
இதிலுள்ள இரும்புச்சத்து மற்றும் கால்சியம் உள்ளதால் நம் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்தி கெட்ட கொழுப்புகளை குறைக்கவும் உதவி செய்கின்றது. இதனை நாம் சாப்பிடுவதால் சரும பொலிவினை பெறவும் முடிகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |