அவரைக்காய் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
நம் அன்றாட உணவில் அவரைக்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
அவரைக்காய்:
காய்கறி வகைகளில் ஒன்று தான் அவரைக்காய். இதில் நாட்டு அவரை, கொத்தவரை என நிறைய வகைகள் உள்ளன. அது மட்டுமின்றி இது பெரியோர், சிறியோர் என அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு காய்.
இதை நாம் சாப்பிடுவதன் மூலம் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கிறது. இதில் புரதசசத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து உள்ளன.

இது நாம் சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று இங்கே கீழே காணலாம்.
என்ன பலன்:
இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் நமக்கு செரிமான அமைப்பை சீர்ப்படுத்த உதவுகிறது. அது மட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
மேலும் இதில் கிளைசெமிக் குறைவாக இருப்பதால் இது நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. அது மட்டுமின்றி, இதில் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் உள்ளதால் இது நம் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதையும் தவிர்த்து இதை சாப்பிடுவதன் மூலம் நம் இருதயத்தை ஆரோக்கியமாக வைத்து கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.
மேலும் இதை நாம் சாப்பிடுவதன் மூலம் நமது சருமம் பாதுகாப்புடனும் பொலிவுடனும் இருக்க உதவுகிறது. மேலும் இதை நாம் சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் வராமல் தடுக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |