இந்த குணங்கள் இருப்பவர்கள் வாழ்வில் தோல்வியை சந்திப்பதே கிடையாது... உங்களிடம் இருக்கா?
உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற ஒரு தத்துவ நூலாக சாணக்கிய நீதி திகழ்கின்றது. இந்த நூல் ஆச்சாரியா சாணக்கியரின் கொள்கைகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கியுள்ளது.
முன்னைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.
இவரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏராளம் போர் இருக்கின்றனர்.
வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு சிறந்த வழிக்காட்டியாக இருந்துள்ளது. அந்த வகையில் சாணக்கிய நீதியின் பிரகாரம் வாழ்வில் வெற்றியடைய ஒரு நபரிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான குணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வெற்றியின் ரகசியம்
சாணக்கியரின் கருத்துப்படி ஒரு முறையில் வெற்றியடைய வேண்டும் என்றால், முதலில் வேலை செய்யுமிடத்தைப் பற்றிய முழுமையான அறிவு மற்றும் தெளிவு இருக்க வேண்டும்.
இலக்கை அடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள் நிச்சயம் தாங்கள் செய்யும் வேலையில் முழுமையான கவனத்தை செலுத்த வேண்டும்.
தொழில் துறை, சக பணியாளர்கள், சக ஊழியர்களின் அணுகுமுறை, வாய்ப்புகள் போன்ற விடயங்கள் குறித்து அறிந்து வைத்திருப்பவர்கள் தோல்வியடையவது மிகவும் அரிது என்கின்றார் சாணக்கியர்.
தனது துறை தொடர்பாக தினசரி அறிவை வளர்த்துக்கொள்ளும் குணம் கொண்ட நபர்களுக்கு வெற்றி மிகவும் எளிமையாக கிடைத்துவிடும்.
சாணக்கிய நீதியின் பிரகாரம், வாழ்வில் தோல்வியை சந்திக்கவே கூடாது என்றால், நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருக்க வேண்டும். வெற்றியின் மகத்துவத்தை ருசிபார்க்க வேண்டும் என்றால் நேரத்தை மதிக்கும் குணம் நிச்சயம் இருக்க வேண்டும்.
வெற்றி பாதையில் உங்கள் பயணம் இருக்க வேண்டும் என்றால், எதை எப்போது செய்ய வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்பதிலும் நேரத்தை முகாமைத்துவம் செய்வதிலும் போதிய அறிவு இருக்க வேண்டும்.
சூழ்நிலைகள் சரியில்லாத போதும் விடாமுயற்சியுடன் இயங்கும் குணம் இருப்பவர்கள் வாழ்வில் நிச்சயம் வெற்றியடைந்தே தீருவார்கள்.
குறிப்பாக தங்களின் திறமை மீது முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும். ஒரு வேலையைச் செய்யும்போது, அதை உங்களால் செய்ய முடியுமா என்ற சந்தேகம் இன்றி முழு ஈடுப்பாட்டுடன் செய்யும் குணம் இருந்தால், தோல்வி கிட்டவே வராது.
சாணக்கியரின் கருத்துப்படி நண்பனையும் எதிரியையும் வேறுபடுத்திப் பார்க்கும் தெளிந்த அறிவு கொண்டவர்கள் வாழ்வில் வெற்றியடைவது உறுதி என்கின்றார் சாணக்கியர்.
உங்களின் நண்பர்கள் யார் என்பதையும் நண்பர்கள் என்ற போர்வையில் இருக்கும் எதிரிகளையும் வேறுப்படுத்துவது அத்தனை சுலபமாக விடயம் கிடையாது. இந்த தெளிவு ஒருவருக்கு இருந்தால் அவர்கள் வாழ்வில் தோல்வியே கிடையாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |