துணையை ஏமாற்றும் பெண்களிடம் நிச்சயம் இந்த குணங்கள் இருக்கும்...என்னென்ன தெரியுமா?
பொதுவாகவே தங்களின் துணை தங்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவார்கள்.
ஆனால் நாம் நமது துணைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என சிந்திக்கும் தன்மை கொண்டவர்கள் உலகில் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றார்கள்.
சிலர் இயல்பிலேயே உண்மையை மட்டும் பேசுபவர்களாகவும் யாரிருக்கும் துரோகம் நினைக்காதவர்களாகவும் இருப்பார்கள். அதற்காக எல்லோரும் அப்பயே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.
குறிப்பிட்ட சிலர் தங்களின் மகிழ்ச்சிக்கான தங்களின் துணையை ஏமாற்றுவதற்கு சற்றும் தயங்காத குணத்தை கொண்டிருப்பார்கள். அப்படி திருமணத்தையும், காதலையும் மறந்துவிட்டு துணையை ஏமாற்றும் பெண்களிடம் காணப்படும் முக்கிய ஆளுமை பண்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏமாற்றும் பெண்களின் முக்கிய குணங்கள்
எந்த விஷயத்திலும் எப்போதும் திருப்தி அடையாத குணம் கொண்ட பெண்கள் துணையை ஏமாற்றுவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.இவர்களுக்கு எப்போதும் ஒன்றை விட இன்னொன்று சிறந்ததாக தெரியும். இந்த குணம் கொண்ட பெண்களை துணை எவ்வளவு மகிழ்சியாக வைத்திருந்தாலும் அவர்களின் மனம் அதைவிட சிறந்ததை தேடிக்கொண்டே இருக்கும்.
தங்களின் விருப்பப்படி மட்டுமே வாழ நினைக்கும் பெண்கள் துணையை ஏமாற்ற வாய்ப்பு காணப்படுகின்றது. வாழ்க்கையில் சில கட்டுப்பாடுகள் மற்றும் எல்லைகள் நிச்சயம் இருக்க வேண்டும். ஆனால் திருமணமாகிய பின்னரும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மட்டுமே சிந்திக்கும் குணம் கொண்ட பெண்களால் துணையை அனுசரித்து வாழ முடியாத நிலை காணப்படும். இவர்கள் சுயநலனுக்காக துணையை ஏமாற்ற கூடும்.
சுதந்திரமான வாழ்க்கையை வாழ நினைக்கும் பெண்கள் திருமணமானவுடன் அல்லது காதல் உறவில் இந்த அளவிலான சுதந்திரத்தை தொடர்ந்து எதிர்ப்பார்க்க கூடும். அது கிடைக்காத பட்சத்தில் இவர்களுக்கு துணை மீது வெறுப்பு ஏற்படகூடும். அவர்கள் எளிதாக மற்றொரு ஆணுடன் இணைந்திருக்க வாய்ப்பு காணப்படுன்றது.
இயல்பாகவே ஏமாற்றும் குணம் கொண்ட பெண்கள் தங்கள் துணையை ஏமாற்றுவதை ஒரு வழக்கமாகவே வைத்திருப்பார்கள்.அப்படிப்பட்டவர்கள் இதற்கு முன் பல காதல் உறவுகளையோ திருமணங்களையோ செய்திருப்பார்கள்.அவர்களுக்கு ஏமாற்றுவதில் கொஞ்சமும் குற்றவுணர்வு இருக்காது.
திருமணம் மீது நம்பிக்கை இல்லாத பெண்கள் துணையை ஏமாற்றும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. திருமண உறவுகள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தங்கள் துணையின் மீது உண்மையான அன்பை செலுத்த முடியாத நிலையில் இருப்பார்கள். இவர்கள் திருமணம் செய்தாலும் அதற்கான மரியாதையை கொடுக்க மாட்டார்கள். இந்த குணங்களை கொண்ட பெண்களுடன் உறவில் இணையும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |