வேகமாக எடை குறைக்க வேண்டுமா? அப்போ கொழுப்பை எரிக்கும் இந்த பானங்களை இரவில் குடிங்க
பொதுவாகவே ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் தற்காலத்தில் பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்தபடி படி பல மணிநேரங்களுக்கு வேலை பார்ப்பது, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, உடற்பயிற்சி செய்ய நேரம் இன்மை போன்ற பல காரணங்களினால், பலருக்கும் உடல் எடை அதிகரிப்பு ஒரு பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.
குறிப்பாக உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள் தொப்பை பிரச்சினைக்கும், உடல் எடை அதிகரிப்புக்கும் முடிவு கட்ட, இரவில் படுக்கைக்கு செல்லும் முன்னர் எடுத்துக்கொள்ள வேண்டிய பானங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கொழுப்பை எரிக்கும் பானங்கள்
வைட்டமின் சி நிறைந்திருக்கும் எலுமிச்சை நீரை குடித்தால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும். எலுமிச்சை நீர், வெதுவெதுப்பானதாக இருக்க வேண்டும். இது, செரிமானத்தை அதிகரிப்பதோடு, உடலை உறங்க செல்வதற்கு முன்பு டீ-டாக்ஸ் செய்யவும் துணைப்புரியும்.
இலவங்கப்பட்டையில் ஆண்டிஆக்சிடன்ஸ் சத்துகள் செரிந்து காணப்படுகின்றது. இது, உடலில் அழற்சி எதிர்ப்பு பண்புகளை அதிகரிப்பதோடு, இரத்த சர்க்கரை அளவையும் சீராக்குகிறது.இதனை படுக்கைக்கு செல்லும் முன்பு குடித்தால், கொழுப்பை கரைக்த்து தொப்பை பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும்.
Chamomile டீ, மன அழுத்தத்தை குறைத்து, உறக்கத்தை அதிகரிக்கும். இது உடலை ரிலாக்ஸ் செய்து, கொழுப்பை சேர்க்கும் ஹார்மோன்களை சமமாக்குகிறது. மெட்டபாலிசத்தை இது அதிகரிப்பதால், உறங்கும் போது கொழுப்பு குரைக்கும் ஆற்றல் கொண்டது.
ஓமம் தண்ணீர், உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும். மேலும், செரிமானத்தை சீராக்குவதோடு உடல் உப்பசம் ஆகுவதையும் தடுக்கிறது. இதனை தூங்க செல்வதற்கு முன்பு குடிப்பதால், உடலில் இருக்கும் கொழுப்பும் குறையுமாம்.
உடல் கொழுப்பை கரைப்பதில் பெயர் பெற்ற ஒன்று தான் வெந்தைய நீர். ஊற வைத்த வெந்தைய நீரை குடிப்பதால், செரிமானம் அதிகரிக்கும், உடல் எடையும் இயற்கையாகவே வெகுவாக குறைய ஆரம்பிக்கும்.
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு தன்மை உள்ளது. எனவே, வெதுவெதுப்பான பாலில் இரவு உறங்கும் முன்பு மஞ்சள் கலந்து குடிப்பதால், அது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, கொழுப்பையும் குறைக்கும். அதனை தினசரி குடிப்பதால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும்.
கற்றாழை சாறு, உடலில் இருக்கும் அழுக்கை டீடாக்ஸ் செய்யும் பானமாகவும் இருக்கிறது. இதனை, இரவு நேரத்தில் உறங்க செல்லும் முன்பு குடிப்பதால், மெட்டபாலிசத்தின் வேகம் அதிகரிக்குமாம். மேலும், கொழுப்பை உடைத்து செரிமானத்தையும் சீராக்கும். மேலும் சரும ஆரோக்கியத்துக்கு கற்றாழை நன்மை பயக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPPCHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |