Vastu tips: இந்த தினங்களில் வாங்கப்பட்ட வாகனத்தால் விபத்து ஏற்படுமா? எந்த நாள் சிறந்தது?
பொதுவாகவே வீடு, வாகனம் போன்ற சொத்துகள் வாங்க வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் கனவாக இருக்கின்றது. அவ்வாறு நாம் வாங்கும் சொத்துக்கள் நமது வாழ்வில் நீண்ட காலத்துக்கு நம்முடன் பயனிக்க கூடியதாக இருக்கின்றது.
எனவே இதனை வாங்கும் போது மங்களகரமான நாட்களில் வாங்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில நாட்களில் வாகனம் வாங்குவதால் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லாமல் பயணம் மேற்கொள்ள முடியும்.
அது போல் குறிப்பிட்ட சில நாட்களில் வாங்குவது மோசமான விபத்துகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பாக விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
வாகனம் வாங்க உகந்த நாட்கள்
திங்கட்கிழமை : திங்கட்கிழமை சந்திரனின் நாளாக பார்க்கப்படுகின்றது. அதனால் இந்த நாம் மிகவும் அமைதி நிறைந்ததாக இருக்கும். மேலும் வார இறுதி நாட்களின் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் வணிக நடவடிக்கைகளை தெடரும் முதல் நாளாகவும் இது அமைகின்றது. ஆகவே இந்த நாளில் வாகனம் வாங்குவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
புதன்கிழமை: வணிகம் மற்றும் புத்திசாலித்தனத்துடன் புதன் கிரகமானது இணைக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் வாகனம் வாங்குவது நிதி பாதுகாப்பை உறுதிச்செய்வதுடன் வாழ்நாள் முழுவதும் நல்ல சேமிப்பையும் ஏற்படுத்துவதாக அமையும்.
வியாழக்கிழமை: வியாழன் என்பது குரு பகவானின் நாளாக பார்க்கப்படுகின்றது. இது செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது. இந்த நாளில் வாகனம் வாங்குவது வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
வெள்ளிக்கிழமை: வெள்ளிக்கிழமை சுக்கிரனின் நாளாக பார்க்கப்படுகின்றது. இது ஆடம்பரம் மற்றும் உலக இன்பங்களின் கிரகமாக கருதப்பபடுகின்றது. இந்த நாளில் வாகனம் வாங்குவது அனைவரையும் கவரக்கூடிய வகையில் முன்னேற்றத்தை கொடுக்கும். மேலும் அந்த நாளில் வாங்கப்படும் அனைத்து பொரட்களும் இன்பம் மற்றும் செல்வத்தின் சின்னமாக இருக்கும்.
வாகனம் வாங்க கூடாத நாட்கள்
செவ்வாய் :செவ்வாய் கிரகம் என்பது ஆக்கிரமிப்பின் அடையாளமாக கருதப்படுகின்றது.இதனால் இந்த நாளில் வாகனம் வாங்குவது விபத்துக்களை ஏற்படுத்தும் என வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிழடப்படுகின்றது.
சனிக்கிழமை: இந்த நாளில் வாகனம் வாங்குவது நிதி சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு காணப்படுகின்றது. சனி கிரகமானது போராட்டம் மற்றும் துன்பத்தின் அடையாளமான பார்க்கப்படுவதால் இந்த தினத்தில் வாகளம் வாங்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |