தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் போதும்... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது
பொதுவாகவே அனைவரும் உணவுக்கு பின்னர் விரும்பி சாப்பிடக்கூடியது வாழைப்பழம். இதில் ஏராளமான வகைகள் இருந்தாலும் செவ்வாழை பழத்திற்கு முக்கிய இடம் காணப்படுகின்றது.
வாழை பழங்களிலேயே மிக சிறப்பு வாய்ந்த பழம் இந்த செவ்வாழை. இதில் அதிக அளவு உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என அளப்பரிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
மேலும் செவ்வாழைப்பழத்தில் அதிக மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. இதனால் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. இவ்வாறு தினசரி உணவில் செவ்வாழைப்பழத்தை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பாரக்கலாம்.
செவ்வாழைப் பழத்தின் நன்மைகள்
ஏனைய வாழைப்பழங்களை விட செவ்வாழை மிகவும் சுவையாக இருப்பதோடு இதில் ஊட்டச்சத்தும் அதிகமாக காணப்படுகின்றது.
எப்போதும் செவ்வாழைப் பழத்தை நன்றாக பழுத்த பிறகே சாப்பிட வேண்டும்.மற்ற பழங்களை விட செவ்வாழைப்பழத்தில் குறைவான கலோரிகளே காணப்படும். மேலும் இதில் அதிகளவு நார்ச்சத்து காணப்படுவதால் உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
செவ்வாழைப் பழத்தில் உள்ள வைட்டமின் பி-6 ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. ரத்தசோகை நோய் உள்ளவர்கள் தினமும் 2 அல்லது 3 செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டால் அவர்களின் சிவப்பு ரத்த அனுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
செவ்வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. அடிக்கடி செவ்வாழை சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் புற்றுநோய் ஆபத்தை தவிர்க்க முடியும்.
செவ்வாழையில் கால்சியம் அதிகளவில் இருப்பதால் எலும்பைவலுப்படுத்துகிறது. புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட பெரிதும் துணைப்புரிகின்றது.
செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் நிகோடின் உட்கொள்வதை குறைக்க முடியும். புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட நபர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை தவிர்ப்பதிலும் இந்தப் பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் பெரும் பங்கு வகிக்கின்றது.
அடிக்கடி செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் சருமத்தில் ஏற்படும் வடுக்கள் துளைகள் சரியாகின்றன. மேலும் இந்தப் பழத்தில் 75 சதவிகிதம் நீர் மற்றும் ஆண்டி ஆக்ட்சிடெண்ட் இருப்பதால் சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை கொடுக்கின்றது. சருமத்தை மென்மையாகவும் வைத்திருக்க உதவுகின்றது.
செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் தலைமுடியில் உள்ள பொடுகை போக்கும்.குளிர்காலத்தில் தேங்காய், எள் அல்லது பாதாம் எண்ணெய்யோடு கலந்து செவ்வாழைப் பழத்தை தலையில் தேய்த்தால் கூந்தல் பளபளப்பாகவும் ஈரலிப்பாகவும் இருக்கும்.
மலச்சிக்கலை போக்குவதில் மிகவும் உதவியாக இருக்கிறது செவ்வாழைப் பழம். மேலும் நாள்பட்ட மலச்சிக்கல், மூலம் ஆகியவற்றை குணப்படுத்தும்
தினமும் மதிய வேளையில் செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் செரிமானம் பிரச்சினைகளை விரைவில் குணப்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |