முகம் முழுவதும் முடி! விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் வாழ்ந்து வரும் லலித் பாடிடார் என்ற சிறுவன் மிகவும் விசித்திரமான நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சிறுவன் விசித்திரமான Werewolf Syndrome அல்லது Hypertrichosis நோயினால் அவதியுற்று வருகின்றார்.
வாழ்நாள் முழுவதும் இந்த நோயுடன் சிறுவன் தனது வாழ்க்கையை கழிக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
Werewolf Syndrome என்றால் என்ன?
மனித உடலில் மித மிஞ்சிய அளவில் மயிர்கள் வளரும் ஓர் நிலையை இவ்வாறு Werewolf Syndrome என அழைக்கப்படுகிறது.
இந்த அபூர்வமான நோயினால் பாதிக்கப்பட்ட நபர்கள் உடலின் அனைத்து பாகங்களிலும் மயிர் வளரும் நிலைமையாகும்.
தற்பொழுது 17 வயதான இந்த சிறுவனுக்கு ஆறு வயதில் இந்த நோய் ஏற்பட்டுள்ளது. இந்த நோயை காரணமாக லலித்தின் உடல் முழுவதும் முடி படர்ந்துள்ளது.
இந்த அரிய வகை நோயினால் லலித் பாடசாலையில் ஒதுக்கப்படுவதாகவும் ஒடுக்கு முறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுவனின் சக நண்பர்கள் குரங்கு பையன் என அவனை அழைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிறுவன் யாரையாவது கடித்து விடுவார் என சக மாணவர்கள் அஞ்சுகின்றனர்.
உருக்கமாக பேசிய லலித்
“நான் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன் எனது தந்தை ஒரு விவசாயி நான் தற்பொழுது உயர்நிலைப் பள்ளியில் தரம் 12 ல் கற்று வருகிறேன் தந்தைக்கு விவசாய நடவடிக்கைகளில் உதவுகின்றேன்”
“எனக்கு ஆறு அல்லது ஏழு வயது ஆகும் வரையில் எந்த விதமான வித்தியாசத்தையும் நான் உணரவில்லை, அதன் பின்னர் உடல் முழுவதும் மயிர்கள் வளர தொடங்கின.
எனது வாழ்க்கை முழுவதும் இவ்வாறு கழிக்க வேண்டி நேரிட்டுள்ளது.
இந்த விசித்திரமான நோயினால் உலகில் இதுவரை 50 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனது குடும்பத்தில் வேறு யாருக்கும் இந்த நோய் இருந்ததாக தெரியவில்லை என தெரிவிக்கின்றனர்.
இந்த நோய்க்கு மருந்து கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது காலத்திற்கு காலம் மயிரை குறைப்பதாக அவர் தெரிவிக்கின்றார்.
எனினும் தனது தோற்றத்தில் மாற்றத்தை கொண்டு வர அவர் விரும்பியதில்லை என தெரிவிக்கின்றார்.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டாலும் அவர் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார், தான் அவர் வித்தியாசமான நபர் எனவும் இந்தப் பயணத்தில் பல்வேறு விடயங்களை கற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கிறார்.
மேலும் ஒரு மில்லியன் பேரில் தான் ஒருவர் என்பதை உணர்ந்து கொண்டதாகவும், இந்த ஒரு நேரத்திலும் முயற்சியை கைவிடக் கூடாது என்பது உணர்ந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னை நினைத்து தான் பெருமிதம் அடைவதாக லலித் கூறுகின்றார்.