எப்பேர்பட்ட தொப்பையும் குறையும்! இந்த இரண்டு பொருள் இருந்தாலே போதும்
இன்று பலருக்கும் பிரச்சனையாக இருப்பது தொப்பையே, சிலருக்கு அடிவயிற்று பகுதி, சிலருக்கு வயிற்றின் மேல்பகுதி.
அதிகப்படியான வேலைப்பளு மற்றும் மன அழுத்தம், ஹார்மோன் மாறுபாடுகளால் அடி வயிற்று பகுதியில் தொப்பை வரலாம்.
ஆனால் வயிற்றின் மேல்பகுதியில் தொப்பை வருவதற்கு காரணம் செரிமான கோளாறுகளே.
கல்லீரல் தன் பணியை சரிவர செய்யாமல் போகும் போதும் தொப்பை வரலாம், அடிக்கடி பசிப்பது, சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாமல் தொந்தரவாக இருப்பது, கொஞ்சம் சாப்பிட்டதும் வயிறு நிறைந்த உணர்வு, வாயுத்தொல்லை என பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதற்கெல்லாம் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் செரிமானத்தை சீராக்கும் பானத்தை அருந்துவது பலனை தரும்.
சீரகம் மற்றும் ஏலக்காய் கொண்டு தயாராகும் பானத்தை அடிக்கடி பருகினால் பலனை பெறலாம்.
ஏன் சீரகம், ஏலக்காய்?
உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுக்கும் ஆற்றல் சீரகத்துக்கு உண்டு, ஏனெனில் சீரகத்தில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளும் இந்த பணியை திறம்பட செய்கின்றன.
பொதுவாக உணவு மற்றும் இனிப்புப் பதார்த்தங்களில் சேர்க்கப்படும் ஏலக்காய் உடலில் படியும் கொழுப்பை கரைக்கும் குணம் கொண்டது, ஏலக்காயை, தினந்தோறும் உணவில் சேர்த்து வந்தால் இடுப்பு மற்றும் வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பினை கரைக்கும்.
பானம் தயாரிக்கும் முறை
சீரகம்- 1 டீஸ்பூன்
தண்ணீர்- 2 டம்ளர்
ஏலக்காய்- 2
பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி விட்டு, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க விடவும், தண்ணீர் பாதியாக வற்றியதும் இறக்கும் தருவாயில் ஏலக்காய் தூளை போட்டு பருகவும்.
தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ எடுத்துக்கொள்ளும் போது முதலில் செரிமானம் மேம்பட்டு மேல்வயிறு தொப்பை குறைவதை கண்கூடாக பார்க்கலாம்.
இது தவிர மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளும் சரியாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |