இனி பால் குடித்து எடையை குறையுங்கள்! யாரெல்லாம் தினமும் குடிக்கலாம் தெரியுமா?
பால் குடித்தால் எடை அதிகரிக்கும் என்பது பலரின் பொதுவான கருத்தாக உள்ளது.
பால் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்காது, உண்மையில், அது சில நேரங்களில் உடல் எடையை குறைக்க உதவும். பால் ஆரோக்கியமான உணவாகும்.
இது உயர்தர புரதத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. இது தசையை உருவாக்குவதற்கும், தசை வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
மேலும் இதில் துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துக்கள் உள்ளன.
இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் எலும்புகளை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
250 மிலி பாலில் 8 கிராம் புரதம் மற்றும் 125 மி.கி கால்சியம் உள்ளது. எனவே நீங்கள் உணவு கட்டுப்பாட்டிலிருந்தாலும் கூட குறைந்த அளவில் பால் உட்கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
கால்சியத்தை உட்கொள்வது உடல் பருமன், வளர்சிதை மாற்ற நோய்க்குறி, டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கான அபாயத்தையும் குறைக்கிறது.
நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் எனில் உங்கள் உணவில் இருந்து பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. பால் ஒரு சீரான உணவாகும்.
தினமும் ஒரு கப் பால் குடிப்பது உங்களது உடலை உற்சாகமாக வைத்திருக்க உதவும். உங்கள் உடற்பயிற்சிக்குப் பிறகு புரோட்டீன் ஷேக்கை எடுத்துக்கொண்டால் அதில் பாலை சேர்க்கவும்.