வீட்டில் இருந்தபடியே எடையை குறைக்கணுமா? நடிகர் மாதவனின் டிப்ஸ் இருக்கே!
நடிகர் மாதவன் வீட்டில் இருந்துகொண்டே 21 நாட்களில் எப்படி உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பது எவ்வாறு என்பதை கூறியுள்ளார்.
மாதவன் டிப்ஸ்
நடிகர் மாதவன் தமிழ் திரைப்படங்களின் கவர்ச்சி நடிகர்களில் ஒருவர்.இந்த வயதிலும் அவர் எவ்வாறு தனது உடலை கட்டுகோப்பாக வைத்திரக்கிறார் என்பதை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அவர் கூறும் போது ‘ஜிம் செல்வது, உடற்பயிற்சி செய்வது என எந்த மாதிரியான உடற்பயிற்சியும் நான் செய்யவில்லை. அதற்கு பதிலாக, உணவை நன்றாக மென்று ரசித்து சாப்பிடுவேன், 40 முதல் 60 முறை தண்ணீர் குடிப்பேன்.
மாலை 7 மணிக்குள் இரவு உணவு சாப்பிடுவேன், அதிகாலை 90 நிமிடமும், தூங்குவதற்கு முன்னும் நடைபயிற்சி செய்வேன், இயற்கையான உணவு, பதப்படுத்தப்பட்ட உணவை எடுத்துக் கொண்டு 21 நாட்களில் உடல் எடையை குறைத்ததாக மாதவன் தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |