காலையில் குடிக்க வேண்டிய அருமையான பானம்! கொழுப்பை கடகடவென கரைக்கும் அற்புதம்
பொதுவாக ஓமம் சமையலுக்கு மட்டுமன்றி , சில வீட்டு வீட்டு வைத்தியங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஓமத்தில் தாமிரம் , அயோடின், மாங்கனீசு, தியாமி, கார்போஹைட்ரேட், கொழுப்பு புரதம், நார்ச்சத்து, டானின்கள், கிளைகோசைடுகள், சபோனின்கள், ஃபிளாவோன், கோபால்ட் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற பண்புகள் நிறைந்துள்ளன. பெரும்பாலும் ஓமம் தண்ணீர் மருந்து கடைகளில் வாங்கிதான் கொடுப்பார்கள்.
ஆனால் அதை நீங்கள் வீட்டிலேயே செய்ய கற்றுக்கொண்டால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் குடிக்கலாம்.
அந்தவயைில் தற்போது எந்தெந்த பிரச்னைகளுக்கெல்லாம் குடிக்கலாம். அதன் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
இன்றைய ராசிபலன்: குருவின் பார்வையால் கோடியில் புரளும் ராசிகள்
தேவையான பொருட்கள்
ஓமம் - 1 tsp
தண்ணீர் - 500 ml
எலுமிச்சை - 1
மஞ்சள் தூள் - 1 tsp
கருப்பு உப்பு - தேவையான அளவு
தேன் - 1 tsp
செய்முறை
ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்க வேண்டும்.
கொதித்ததும் அதை வடிகட்டி அந்த தண்ணீரில் எலுமிச்சை, மஞ்சள் தூள், கருப்பு உப்பு, தேன் ஆகியவற்றை கலந்து குடிக்க வேண்டும்.
தனது மூன்றாவது மகள் இவர் தான்! மறுமணம் செய்த இமான் உருக்கம்
நன்மை என்ன?
சளி, இருமல், காது, வாய் தொற்றை உண்டாக்கும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும். கண் நோய் தொற்றுக்கும் ஓமம் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
நுரையீரலை சுத்தப்படுத்தவும், தொண்டை குரல்வளையை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் ஓமம் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்துமா நோயாளிகளின் சுவாசப் பிரச்னைக்கு ஓமம் நிவாரணியாக இருக்கிறது.
வயிற்று வலி, இரப்பைக் குடல் பிரச்னைகளுக்கும் ஓமம் சிறந்த மருந்தாக இருக்கிறது. ஒமம் நீரானது குடல் நொதிகளை தூண்டி செரிமானத்தை சிறப்பாக செயல்பட வைக்கிறது.
முடக்கு வாதம், அழற்சி நோய் போன்ற பிரச்னைகளுக்கும் ஓமம் உதவுகிறது.
உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஓமம் உதவுகிறது. இது விரைவில் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. அதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.