ஐஸ் தண்ணீர் குடித்தால் உடல் எடை குறைந்து விடுமாம்: இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?
பொதுவாகவே இப்போது பல்வேறு காரணங்களால் பலருக்கும் உடல் எடை அதிகரித்துக் கொண்டிருக்கும் இதற்கு பால் குடித்தால் எடை குறையுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.
உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர்.
அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள். ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் போக போக அதன் மேல் இருந்து தீவிரம் இல்லாமல் போகும்.
விரைவாக உடல் எடையை குறைக்க, சர்க்கரை, மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவைக் குறைக்க வேண்டும்.
உங்கள் தினசரி உணவில் புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் காய்கறிகளைச் சேர்ப்பதன் மூலம் குறைந்த கலோரி மற்றும் நிறைய ஊட்டச்சத்துக்களை பெற முடியும். இதனால் உங்கள் எடையை சீராக பராமரிக்க முடியும்.
அந்தவகையில், ஐஸ் தண்ணீர் குடித்தால் உடல் எடையைக் குறைக்கலாம்.
ஐஸ் தண்ணீர் குடித்தால் எடை குறையுமா?
ஜில்லென்ற ஐஸ் தண்ணீர் குடிப்பது வளர்ச்சிதை மாற்றத்ததை அதிகரிக்கும்.
இந்த ஐஸ் தண்ணீரை குடித்தால் மெட்டபாலிசம் 25% வரை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு குடிக்கும் போது உடலில் வெப்பத்தை சமநிலைப்படுத்த உடல் வெப்பத்தை அதிகரிக்கும் செயல்பாட்டில் ஈடுபடும்.
இதனால் உடலில் சேகரிக்கப்பட்டிருக்கும் கலோரிகள் எரிக்கப்பட்டு இதன் மூலம் எடை குறையும்.