உடல் ரொம்ப மெலிதாக இருக்கா? 15 நாட்களில் எடையை ஏற்றும் டிப்ஸ்
நம்மள் சிலர் பார்க்கவே மெலிந்து போய், போதுமான அளவு ஊட்டச்சத்து இல்லாதவர்கள் போன்று இருப்பார்கள்.
அப்படியானவர்கள், நன்றாக சாப்பிட்டாலும் உடல் எடை ஏறாமல் இருக்கும். இதற்கு பல ஆரோக்கிய குறைபாடுகள் காரணமாக இருந்தாலும், போதுமான அளவு உடற்பயிற்சி, தூக்கம், ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் இருந்தால் உடல் எடை கொஞ்சம் அதிகரிக்கும்.
வயதிற்கு ஏற்ற வளர்ச்சி இல்லாவிட்டாலும், ஏதாவது குறைபாடு என சமூகத்தில் பல சந்தரப்பங்களில் அசிங்ப்படுத்தப்படுவார்கள். இதை தவிர்த்து வீட்டிலுள்ள சில பொருட்களை வைத்து இயற்கை வைத்தியம் செய்யலாம் என நிபுணர் ஒருவர் பேசிய காணொளி வைரலாகி வருகின்றது.
மருத்துவ பரிசோதனை, தவறான தூக்கம், இரத்த சோகை செண்டிமெண்ட் வாழ்க்கை, தைராய்டு நோய்,டைப் டைபீட்டஸ் வகை, மன அழுத்தம், முறையற்ற உணவு உள்ளிட்ட விடயங்களில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில், 15 நாட்களில் உடல் எடையை அதிகரிக்க வீட்டிலேயே என்ன செய்யலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

15 நாட்களில் தீர்வு
1. நீங்கள் பார்ப்பதற்கு ரொம்பவே ஒல்லியாக இருக்க மாதிரி இருக்கிறது என்றால் அடிக்கடி கேழ்வரகு கஞ்சி செய்து குடிக்கலாம். இது உங்களுக்கு தேவையான சக்தியை வழங்கும். அத்துடன் உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும்.
2. விளையாட்டுத்துறையில் சாதிக்க நினைப்பவர்கள் சர்க்கரவள்ளி கிழங்கு, வேர்க்கடலை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால் உங்களுடைய உடல் எடை தானாகவே அதிகமாகும். இதிலுள்ள சத்துக்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சக்தியை உடலுக்கு கொடுக்கிறது.

3. தென்னிந்தியர்கள் இட்லி,தோசை சாப்பிடாமல் அன்றைய நாளை துவங்கமாட்டார்கள். என்ன தான் அவசர வேலை இருந்தாலும் வீடுகளில் காலையில் மறக்காமல் இதை செய்து விடுவார்கள். அப்படி காலையில் இட்லியுடன் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
4. காலையுணவாக இட்லி, நல்லெண்ணெய் எடுத்துக் கொண்டது போன்று மதிய உணவிற்கு சாதம், சாம்பார், நல்லெண்ணெய், பொரியல் சேர்த்து சாப்பிடலாம். இது உங்களுக்கு நிறைவானதொரு உணர்வை கொடுக்கும்.

5. முளைகட்டிய பயறுடன் தேங்காய் பூ சேர்த்து இரவில் சாப்பிட்டால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். சிலர் காலையில் சாப்பிடுவார்கள். எந்த நேரத்தில் சாப்பிட்டாலும் முளைக்கட்டிய பயற்றில் உள்ள சத்துக்களை உடல் எடையை அதிகரிக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |