மனைவியிடம் தனிமையில் இருக்கும்போது மாட்டிக்கொண்ட கணவன்; பின்பி நடந்த பரபரப்பு சம்பவம்!
சென்னை ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர்(29). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் மேட்ரிமோனி மூலம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பாக 50 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணம் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, குடும்ப வாழ்க்கையை தொடங்கிய ராஜசேகர் திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே தன் மனைவியுடன் சந்தோஷமாக இருப்பதில் ஈடுபாடு காட்டாமல் இருந்துவந்துள்ளார்.
இதனால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து ஒருகட்டத்தில் அவர் தனது மனைவியுடன் நெருங்கி வாழ ஆரம்பித்துள்ளார். அப்போதுதான் இத்தனை நாட்களாக ராஜசேகர் செய்துவந்த பித்தலாட்டம் தெரியவந்துள்ளது.
ஒருநாள் மனைவியுடன் நெருக்கமாக இருக்கும்போது ராஜசேகரின் தலையில் இருந்த விக் கழண்டுவிழுந்துள்ளது.
மேலும், வழுக்கை தலையை மறைத்து, ராஜசேகர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டது அவரது மனைவிக்கு தெரியவந்துள்ளது.