கொத்து கொத்தாக பாம்புகளை வைத்து மணமேடையில் நபர் செய்த காரியம்... பீதியை கிளப்பிய காட்சி
திருமண நிகழ்வு ஒன்றில் நபர் ஒருவர் கழுத்தில் ஏகப்பட்ட பாம்புகளை போட்டுக் கொண்டு வெளியிட்ட காணொளி வைரலாகி வருகின்றது.
கழுத்தில் பாம்புடன் மனிதர்
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்ட நிலையில், இதன் அருகில் செல்வதற்கு மக்கள் பயந்து நடுங்குவார்கள். அந்த அளவிற்கு உயிரை பறிக்கும் அளவிற்கு விஷம் கொண்டது.
காடுகளில் அதிகமாக காணப்படும் பாம்புகள், தற்போது மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் வர ஆரம்பித்துவிட்டது. சமையலறை, படுக்கையறை, கார், பைக் இவற்றினுள் இருப்பதை அவ்வப்போது பார்த்து வருகின்றோம்.
இவ்வாறு மனிதர்களை அச்சுறுத்தி வரும் பாம்புகளை நபர் ஒருவர் கொத்தாக கழுத்தில் அணிந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணொளியில் திருமண மேடை ஒன்றில் வைத்திருந்த பையில் இருந்த பாம்புகளை எடுத்துக்கொண்டு தனது கழுத்தில் மாலையாக போட்டுள்ளார்.
அவரது கழுத்தில் பல பாம்புகள் உள்ள நிலையில், இக்காட்சியினை அவதானித்தவர்கள் கடுமையாக திட்டி வருகின்றனர். சிலர் வனத்துறையினர் கண்ணில் படும்படி இந்த காணொளி செல்ல வேண்டும் என்றும் கொந்தளித்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள இந்த காணொளியினை பல லட்சம் பேர் அவதானித்துள்ளதுடன், உண்மையில் இது எங்கு எடுக்கப்பட்டது என்பது சரியான விபரம் எதுவும் வெளியாகவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
