திருமணத்திற்கு ஏற்ற ஆடையை தேர்ந்தெடுக்க கஷ்டப் படுகிறீர்களா? அப்போ உங்களுக்காகத் தான்!
பொதுவாகவே திருமணம் என்றால் எல்லாம் நிறைவாக இருக்க வேண்டும். ஆடைகளில் இருந்து சமையல் வரை எல்லாமே எல்லோரையும் திருப்திபடுத்தும் அளவில் இருக்க வேண்டும்.
அதேபோல மணப்பெண்ணாக இருக்கும் நீங்கள் இன்னும் அழகாக தோன்ற வேண்டும். அதிலும் உங்கள் ஆடை என்பது அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் இருக்க வேண்டும்.
அப்படி நீங்கள் உங்கள் ஆடையை தேர்தெடுக்கும் போது எப்படியான ஆடைகளை தேர்தெடுக்க வேண்டும் தெரியுமா?

1. உங்கள் மனதுக்கு பிடித்தமான ஒரு உடையை தேர்ந்தெடுங்கள் அந்த ஆடை உங்கள் பாரம்பரியமான ஆடையாகவும், நவீன ஆடையாகவும் இருக்கலாம்.
2. உங்கள் திருமணத்தன்று எந்த நிறத்தில் ஆடையை அணிய வேண்டும் என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
3. உங்கள் உடல் அழகிற்கு இந்த ஆடை உடுத்தினால் அழகாக தோற்றமளிப்பேன் மற்றும் வசதியாக இருக்கும் என நினைக்கும் ஆடையை தேர்ந்தெடுங்கள்.
4. திருமணத்தில் நிறம் என்பது முக்கியமானது. அதுவும் உடலுக்கு ஏற்ற நிறமும், போட்டோஸ் மற்றும் வீடியோக்களிலும் உங்கள் ஆடையின் நிறம் எடுப்பாக தெரிய வேண்டும். அதே போல மங்களகரமாகவும் தெரிய வேண்டும்.
5. புடவைக்கு பதிலாக துப்பட்டா அல்லது முந்தி மிகவும் பிரமாண்டமானதாக இருக்க வேண்டும். அதுதான் உங்கள் முழு ஆடையின் தோற்றத்தை அதிகரித்துக்காட்டும்.
6. உங்கள் திருமணம் எந்த சீசனில் நடைபெறுகிறதோ அதற்கு ஏற்றாற்போல் ஆடையை தெரிவு செய்ய வேண்டும்.
7. நீங்கள் உடைகளை தேர்வு செய்தப் பின் ஒரு தடவை உங்கள் உடையை உடுத்திப்பாருங்கள் அப்போது குறை நிறைகள் தெரியும்.