ஏற்கனவே 6 திருமணம்.. 63 வயதில் ஏழாவதாக திருமணம் செய்து பிரிந்த முதியவரின் அதிர்ச்சி காரணம்!
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியை சேர்ந்த 63 வயதுடைய ஒரு முதியவருக்கும் 42 வயதுடைய ஒரு பெண்ணுக்கும், கடந்த செப்டம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதன்பின், முதியவர் கடந்த டிசம்பர் மாதம் தனது மனைவியை பிரிந்து இருக்கின்றார். இதுகுறித்து அவர் கூறிய காரணம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அதாவது, மனைவி என்னுடன் உடலுறவு கொள்ளவில்லை என்றும், என்னுடன் தூங்குவதற்கு அவர் விரும்பவில்லை என்றும் தனக்கு இருதய நோய் நீரிழிவு நோய் ஆகியவை இருப்பதால் அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுவிடும் என்றும் அஞ்சுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், எனக்கு உடல் தேவையை பூர்த்தி செய்து கொள்ள தான் மனைவியை வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு ஏற்கனவே ஆறு திருமணங்கள் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
அவருடைய முதல் மனைவி கிராமத்தில் வசித்து வருவதாகவும், அவர்களுக்கு 5 பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இது தெரிந்ததால் அவருடைய ஆறாவது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆறாவது மனைவி ஒரு விதவைப் பெண் ஆவார்.
அவர் வரதட்சனை கொடுத்து திருமணம் செய்து இருக்கின்றார். ஆனால், அந்த முதியவர் தன் மனைவியை விட்டுவிட்டு சகோதரியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
மீண்டும் அந்த பெண்ணை அழைத்துச் செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது. முன்னதாக அவர் ஐந்து மனைவிகளை எதற்காக பிரிந்தார் என்பது இன்னமும் தெரியவில்லை.