திருமணத்தை நிறுத்திவிட்டு எஸ்கேப் ஆகிய மணமகள்! பின்பு அரங்கேறிய சோகம்
திருமணத்தினை நிறுத்திவிட்டு எஸ்கேப் ஆகிய மணப்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் உத்திரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
எஸ்கேப் ஆன மணப்பெண்
உத்திரப் பிரதேச மாநிலம், மிர்சாபூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், திருமணத்திற்கு ஒரு நாள் இருக்கும் நிலையில் உறவினர்கள் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.
திருமணத்திற்கு ஒருநாள் முன்பு, தனது காதலனை திருமணம் செய்துகொள்ள நினைத்து, மணப்பெண் திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி, அப்பெண்ணின் காதலனும், பெண்ணின் உறவினரும் பெண்ணின் வீட்டை அடைந்த நிலையில், இவர்கள் மூன்று பேரும் மோட்டர் சைக்கிளில் எஸ்கேப் ஆகியுள்ளனர்.
வீட்டை விட்டு ஒரு கிலோமீற்றர் தூரமே சென்றுள்ள நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. எதிரே வந்த லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே மணப்பெண், மணப்பெண்ணின் உறவினர், காதலன் என மூன்றுபேரும் உயிரிழந்துள்ளனர்.
மூவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.