திருமணம் நடப்பது போன்று கனவு கண்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
Marriage
By Sinduja
பொதுவாக கனவுகள் என்று கூறினாலே அது நம் ஆழ் மனதில் தோன்றும் எண்ணங்கள், நினைவுகள் என்பவற்றின் பிரதிபலிப்புதான் என்று கூறுவார்கள்.
உண்மையில் கனவுகளுக்கு பலன் உண்டா? இல்லையா? என்று கேட்டால், சில நேரங்களில் கனவுகள் நம் வாழ்வில் எதையோ ஒன்றை உணர்த்துவதற்காகவே வருகின்றது. அப்படியும் இல்லையென்றால் சாதாரணமாக வந்து போகின்றது.
ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு அர்த்தம் கூறப்படுவது வழக்கம். அதிலும் திருமணம் நடப்பதுபோல் கனவு வந்தால் அதற்கு பல அர்த்தங்கள் கூறப்படுகின்றது.
அவற்றுள் சிலவற்றை பார்க்கலாம்.
- பொதுவாக திருமணம் நடப்பதுபோல் கனவு வந்தால் எதாவது நோயினால் துன்பம் ஏற்படும் அர்த்தம் என்று கூறப்படுகிறது.
- தமக்குத் தாமே திருமணம் நடப்பதுபோல் கனவு கண்டால் சிறைக்குச் செல்லுதல், மன அழுத்தம் போன்றவற்றை குறிக்கின்றதாம்.
- தங்களுக்கு தெரிந்தவர்களுடன் திருமணம் நடப்பதுபோல் கனவு வந்தால், முன்பு செய்த தவறுகளை நினைவுப்படுத்துவதாக சில சம்பவங்கள் நிகழப் போவதென்று அர்த்தமாம்.
- தெரிந்த பெண்ணை திருமணம் செய்வதுபோல் கனவில் வந்தால், தன் மனைவிக்கு நல்ல கணவராக இருப்பார் என்று அர்த்தம் கூறப்படுகிறது.
- கர்ப்பமடைந்த பெண் திருமணம் செய்து கொண்டதைப் போல் கனவில் வந்தால் பெண் குழந்தை பிறக்குமாம்.
- பாரம்பரியமான திருமணத்தில் கலந்து கொள்வதைப் போல் கனவு கண்டால் புதிய வேலை கிடைக்குமாம்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US