ஹெல்மெட் அணிந்தால் முடி உதிருமா? பலரும் அறியாத உண்மை
ஹெல்மெட் அணிவதால் முடி உதிர்தல் ஏற்படுமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஹெல்மெட் அவசியம்
இருசக்க வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் அணிவது கட்டாயமான ஒன்றாகும். உயிர்காக்கும் கவசமாக இருக்கும் ஹெல்மெட்டை பலரும் அணியாமல் செல்கின்றனர்.
இதற்காக காவல்துறையினர் பல விதிமுறைகள் கொண்டு வந்தாலும், சிலர் அதையும் கண்டுகொள்ளாமல் செல்கின்றனர்.
ஆனால் ஒரு சிலருக்கு ஹெல்மெட் அணிவதால், முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும் என்ற எண்ணம் உள்ளது. இது உண்மையா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆண்களில் முடி உதிர்விற்கு முக்கிய காரணமாக இரு்பபது டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (DHT) என்பதாகும். மேலும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், புகைபிடிப்பவர்கள் முடி உதிர்வு ஏற்படும் என்று கூறப்படுகின்றது.
இதுவே பெண்களுக்கு உணவுக் குறைபாடுகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, PCOD, ஹைப்பர் அல்லது ஹைப்போ தைராய்டு காரணமாகும்.
ஹெல்மெட் அணிந்தால் முடி உதிருமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி உதிர்தல் ஏற்படும் என்பதை மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால் நீண்ட நேரம் ஹெல்மெட் அணிவது வியர்வை காரணமாக பொடுகுக்கு வழிவகுப்பதுடன், முடியின் வேர்களுக்கும் பிரச்சனையை அளிக்கின்றது.
அதிகமாக ஹெல்மெட் அணிந்து செல்பவர்கள், அடிக்கடி தலைமுடியை அலச வேண்டும், அழகுபடுத்துவதற்கு கரிம அல்லது குறைந்த ரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதுவது நல்லது.
ஹெல்மெட் சுத்தமாக இருக்க வேண்டும். உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலைக்கு ஏற்ற தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும். தலையில் பொடுகு தொல்லை அதிகமாக இருந்தால் தோல் மருத்துவரை சந்திக்கவும்.
ஹெல்மெட் அணிந்து செல்லும் போது காட்டன் துணியால் உச்சந்தலையை மூடிக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |