நிலச்சரிவில் காணாமல் போன உறவுகள்... நாய் நடத்தும் பாசப்போராட்டம்! கலங்க வைக்கும் காட்சி
வயநாடு நிலச்சரிவில் உறவுகளை இழந்த நாய் ஒன்று நடத்திய பாசப்போராட்டம் அனைவரையம் நெகிழ வைத்துள்ளது.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 30ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு, பல உயிர்கள் மண்ணுக்குள் புதைந்தது.
Optical illusion: இந்த படத்தில் Reading என்ற சொற்களுக்கு நடுவே இருக்கும் Beading என்ற சொல்லை கண்டுபிடிக்க முடியுமா?
இதில் முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை இந்த கிராமங்கள் முற்றிலுமாக மண்ணுக்கடியில் சென்றுள்ளது.
நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவு மட்டுமின்றி, மழையும் அதிகமாக பெய்து வந்ததால் வெள்ளக்காடாகவும் காட்சி அளித்துள்ளது.
இந்நிகழ்விலிருந்து பலரும் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காட்டுப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளதை நாம் அவ்வப்போது தெரிந்து கொண்டு வருகின்றோம்.
ஆனால் இரவில் தூங்கச் சென்றவர்கள் சற்று சுதாரித்துக் கொள்ளும் முன்பு உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. இன்றும் இறந்த உடல்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டு வருகின்றது.
உறவுகளை இழந்த நபர்கள் முகாம்களில் தங்க வைத்துள்ளதுடன், தனது உறவுகளின் சடலத்தை அடையாளம் காணமுடியாத அளவிற்கு சிதைந்துள்ளத. மேலும் சில சடலங்களில் உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக கிடைத்து வருவது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் வளர்ப்பு பிராணிகளும் தங்களது பாசப்போராட்டத்தினை காட்டி வருகின்றது. ஆம் தனது உறவுகளை காணாமல் இடத்தை விட்டு நகராமல் அடம்பிடிக்கும் நாய் ஒன்றின் காட்சியே இதுவாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |