உடலுக்கு தேவையான நீரை அருந்தாவிட்டால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா?
நமது உடலுக்கு தினந்தோறும் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம். மனித உடலானது 70 சதவீதம் நீராலானது.
உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தலைசுற்றல், படபடப்பு ஏற்படும். உடலில் நீர்ச்சத்து சரியாக இருந்தால், ரத்த ஓட்டம் சரியாக இருக்கும். ரத்த ஓட்டம் சரியாக இருந்தால், சிறுநீரகத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.
குறைந்த அளவு நீரைக் குடிப்பவர்களுக்கு, சிறுநீர் பாதையில் கற்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகம். சிறுநீரக பாதையில் கற்கள் உண்டாகி அறுவை சிகிச்சையின் மூலம் அதை அகற்றிவிட்டாலும் கூட, மீண்டும் சிறுநீரகப் பாதையில் கற்கள் உண்டாகாமல் தடுக்க நாள்தோறும் 2 முதல் 3 லிட்டர் சிறுநீரை வெளியேற்ற வேண்டும். அப்படி என்றால் அதற்கு இரண்டு பங்கு நீரை அவர்கள் குடிக்க வேண்டும்.
அதிக தண்ணீர் குடிக்காவிட்டால், மூலப்பொருட்களின் அடர்த்தி காரணமாக அடர்த்தியான சிறுநீர் வரும். மேலும், உடல்நலனை பாதிக்கும். கால் வீக்கம், இதய நோய் உள்ளவர்கள், சிறுநீரகச் செயல் இழப்பு பிரச்சினை உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிகமாக நீர் அருந்தக் கூடாது.
உடலில் அதீதமான நீர் சேர்வது ஆபத்தில் முடியும். மனித மூளையில் தாகம் குறித்த உணர்வை தூண்டும் மையம் உள்ளது. இதன் தூண்டுதலின் காரணமாகவே தண்ணீர் குடிக்க வேண்டும் என்னும் உணர்வு நமக்குத் தோன்றுகிறது.
3 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கும் 70 வயதைக் கடந்த முதியவர்களுக்கும் மூளையில் தாக மையத்தின் தூண்டல் இருக்காது. அதனால் இந்த வயதில் இருப்பவர்களுக்கு தாகம் எடுக்கும் உணர்வு தோன்றாது. அவர்களுடைய தாகத்தை அறிந்து நீரை அளிக்க வேண்டியது அவசியம்.
இல்லாவிட்டால் அவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். ரத்த அழுத்தமும் குறையும். பெண்கள் கருவுற்றிருக்கும் போது 2½ லிட்டர், தாய்பால் கொடுக்கும் போது 3 லிட்டர் குறைந்த பட்சம் நீர் அருந்துமாறு அறிவுறித்தப்படுகின்றனர்.
தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகள் அநேகமாக மொத்த எடையும் நீரால் ஆனவை. பால், மோர், இளநீர், பழச்சாறுகள், எலுமிச்சை நீர், சர்பத் ஆகியவை நீர் மிகுந்தவை.
அவை உடலிற்கு நீர்ச்சத்தை கொடுக்கும் வெயில் காலங்களில் இவைகளை அதிக அளவு எடுத்துக் கொள்ளலாம்.