தண்ணீர் நிரப்பும் வாளியில் தவறி விழுந்த சிறுவன்; பதறிய பெற்றோர்கள்.. சோக சம்பவம்!
தென்காசி சங்கரன்கோவில் அருகே உள்ள கக்கன் நகரை சேர்ந்தவர் செபாஸ்டின். இவரின் மனைவி எஸ்தர். இவர்களுக்கு, ஆரோன் என்ற இரண்டு வயது மகன் உள்ளார். இந்நிலையில் வீட்டின் பின்புறம் இருந்த படிக்கட்டில் அமர்ந்தவாறு குழந்தை ஆரோன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது, படிக்கட்டின் அருகே இருந்த தண்ணீர் நிரப்பிய வாளியில் இருந்து சிறிய பொம்மை கோப்பையில் தண்ணீரை இரைத்து விளையாடிக்கொண்டிருந்துள்ளான் சிறுவன். திடீரென் சிறுவன் நிலைதடுமாறி தண்ணீர் வாளிக்குள் விழுந்துள்ளான்.
இதனை அங்கிருந்தவர்கள் யாரும் பார்க்காத நிலையில்,
சிறிதுநேரம் கழித்து வீட்டின் பின்புறமாக சென்று பார்த்தபோது சிறுவன் தண்ணீர் வாளியில் மூழ்கியவாறு இறந்து கிடப்பதை பார்த்து கதறியுள்ளனர்.
இரண்டு வயது சிறுவன் தண்ணீர் வாளியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.